பக்கம்:விளையாட்டுத் துறையில் தமிழ் இலக்கிய வளர்ச்சி.pdf/90

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

88

டாக்டர் எளில் நவராஜ் செல்லையா

நான் தமிழ் எம். ஏ. பரீட் சைக் குப் படித்துக் கொண்டிருக்கிறேன். உங்களுக்குத் தேவையானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று எடுத்துத் தந்தேன். பிறகு தருகிறேன் என்று வாங்கி கொண்டு போய் விட்டார்கள். ஒரு மெளனமான புன்சிரிப்புடன் என்னைப் பார்த்து விட்டுப்போனார்கள். நானும் விஷயம் புரியாமல் நின்றேன்.

ஒரு நாள் என்னை 5-ம் வகுப்புக்குத் தமிழ் எடுக்குமாறு தலைமை ஆசிரியை பணித்தார்கள். நானும் சென்றேன். ஏதோ ஒரு மூட் (mood) ஒரு பாட்டை கரும் பலகையில் எழுதி மாணவ மாணவியரை எழுதிக் கொள்ளச் செய்தேன்.

நீரே நீரே தண்ணிரே நெருப்பில் காய்ந்தால் வென்னிரே!

இப் படித் தொடங்கி, தண்ணிரின் பெருமையை விளக்குவதாக அந்தப் பாடலை எழுதியிருந் தேன்.

இந்தப் பாடலைப் படித்த, அந்தத் தமிழாசிரியைக் கு என்னை சோதித்துப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது. என்னை ஒரு சிக்கலான சூழ்நிலையில் சிக்க வைத்து விட்டார்.

ஒரு நாள் நண்பகல் 1 மணி இருக்கும் ஆசிரியைகள் அனைவரும் ஒன்றாக அமர்ந்து சாப் பிட்டுக் கொண்டிருக்கிறபோது, எனக்கு ஒரு அழைப்பு வந்தது. நான் போன போது, சாப்பாட்டை முடித்துவிட்டு எல்லோரும் ஜாலியாகப் பேசிக் கொண்டிருந்தனர்.

தமிழாசிரியை தொடங்கி வைக்க, தலைமை ஆசிரியை என்னிடம் பேச ஆரம்பித்தார்கள்.

இந்த ஆண்டு நமது பள்ளி ஆண்டு விழாவில், ஒரு நாட்டிய நாடகம் நடத்த இருக்கிறோம். அதுவும் கம்ப இராமாயணத்திலிருந்து ஒரு காட்சியை வைப்பதாகவும் முடிவு