பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எஸ். நவராஜ் செல்லையா 31 பந்து வெடித்தால் வீர்வரும்! பந்து வெடித்தால் காற்று வரும், பீர் எப்படி வரும் என்று கேட்க வேண்டும் போல் தோன்றுகிறதல்லவா! கால்பந்தாட்டம் தொடங்கிய காலத்தில், வட இங்கிலாந்தில் இப்படிப்பட்ட நிகழ்ச்சிகள் அடிக்கடி நிகழ்ந்தன. அவைதான் ஆச்சரியமான வரலாற்று நிகழ்ச்சிகளாகும். கால் பந்தாட்டத்திற்கான பந்தை உருவாக்க, சீசாவை மூடுகிருேமே, அந்த கார்க்குகள் வாங்கப் பணம் திரட்டி, சத்திரத்திற்குச் சென்று (inn) அங்குள்ளவர்களிடம் கார்க்குகள் வாங் வந்து நல்ல கெட்டியான துணிப்பையுள் போட்டு, கன்ருகத் தைத்து பந்தாக்கி விடுவார்கள். ஆட்டத்தில் பந்து போடப்பட்டு உற்சாகம் கிறைந்த ஆட்டக்காரர்களால் உதைக்கப்படும்போது, கார்க்குள்ள பையானது கிழிய ஆரம்பித்துவிடும் அல்லவா! - பந்து கைந்து போகின்ற தன்மையில் வெடித்து விட, அதனுள்ளே இருக்கும் கார்க்குகள் சிதறிச்சென்று விடும்.அவ்வாறு சிதறி விழும் கார்க்குகளைப் பொறுக்க ஒவ்வொரு கால் பந்தாட்ட ரசிகரும் அல்லது வெடிக்குமா என்று துடிப்புடன் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பவர்களும் விழுந் தடித்துக்கொண்டு ஒடு வார்கள். (கடையிலும் கோயில் வாசலிலும் தேங்காய் உடைத்தால் பொறுக்க ஓடுபவர்கள்போல). அவ்வாறு பொறுக்கிக் கொண்டவர்கள், கேராக சத்திரத்திற்குப் போய் ஒரு கார்க்கு கொடுத்தால். ஒரு