பக்கம்:விளையாட்டு அமுதம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

16 விளையாட்டு அமுதம் ஈாைரதான் ஒட்டத்தில் ஒரு கணக்கு ! மாரதான் ஒட்டத்திற்குரிய துாரம் 26 மைல் 385 கெஜ தூரம் என்பது ஏற்கனவே உங்களுக்குத் தெரியும். அந்த ஓட்டத்தை ஒடி முடிக்கின்ற நேரமோ, உலக சாதனை நேரத்தின்படி 2 மணி நேரம் 8 கி. 33.6 விடிைகள்தான். இது 1972 ஆம் ஆண்டு, ஒரு அமெரிக்கர் ஒடி முடித்த சாதனையாகும். மங்கை ஒருத்தியும் இந்த மாபெரும் தூரத்தை ஒடி, மாருத சாதனை ஒன்றையும் கிகழ்த்தியிருக்கிருள். மேற்கு ஜெர்மனியைச் சேர்ந்த கிறிஸ்டின வேலன்சிக் என்ற பெண்மணி, 1975ஆம் ஆண்டு, மே மாதம் 3ந்தேதி மேற்கு ஜெர்மனியில் உள்ள துால்மன் என்னும் இடத்தில் ஒடிய நேரம் 2 மணி 40 நிமிடம் 15 வினடி களாகும். பெண்களுக்கு மாரதான் ஒட்டப் பந்தயத்தில் போட்டி இல்லையென்றலும், தங்களுக்கும் அந்த திண்மையும் திறமையும் இருக்கிறது என்று நிரூபிப்ப தற்காக அவள் ஒடிஞள். மாரதான் ஓட்டத்தில் இந்திய ஆண்களின் சாதனை 2 மணி 15 நிமிடம் 57.4 விடிைகள். இராணுவத்தைச் சேர்ந்த சிவகாத்சிங் எனும் ஒட்டக்காரர் நிகழ்த்திய அரிய சாதனையாகும். மிகுந்த கடுமையும் கொடுமையும் நிறைந்த மாரதான் ஒட்டப்பந்தயத்தில் பங்குபெறும் உலக வீரர்கள், சில சமயங்களில் பாதி ஒட்டத்தை முடிக்க முடியாமல் போய் படுத்து விடுவதும் உண்டு.