பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/12

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10

விளையாட்டு ஆத்திசூடி

ஊதியம் உயிர்க்கு விளையாட்டு ஊருக்கோர் ஊரணி விளையாட்டு ஊனை வளர்க்கும் விளையாட்டு ஊனம் மாற்றிடும் விளையாட்டு ஊளைச்சதை அகற்றும் விளையாட்டு ஊளியைக் கொடுக்கும் விளையாட்டு ஊட்டம் அளிப்பது விளையாட்டு ஊரை ஒன்றாக்கும் விளையாட்டு ஊடாடிப் பார்த்திட விளையாட்டு ஊடாட்டம் கொள்ள விளையாட்டு ஊக்கம் தருவது விளையாட்டு ஊழியன் மனிதர்க்கு விளையாட்டு ஊன்றுகோல் வாழ்வுக்கு விளையாட்டு ஊட்டுந் தாய் ஆவதும் விளையாட்டு

அரும்பொருள்

ஊளி-பசி

ஊடாடி-ஆராய்ந்து ஊடாட்டம்-பழக்கம்