பக்கம்:விளையாட்டு ஆத்திசூடி.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12

விளையாட்டு ஆத்திசூடி

ஏகமாய் விளங்கிடும் விளையாட்டு ஏகாந்தம் மாற்றிடும் விளையாட்டு ஏடாய் உதவிடும் விளையாட்டு ஏடைக்கு இடந்தரும் விளையாட்டு ஏணியாய் உயர்த்திடும் விளையாட்டு ஏதத்தை மாற்றிடும் விளையாட்டு ஏழ்மையை அகற்றும் விளையாட்டு ஏய்ப்பாரை சாடிடும் விளையாட்டு ஏற்றோரை உயர்த்தும் விளையாட்டு ஏறுபோல் நடைதரும் விளையாட்டு ஏந்தலாய் வளர்த்திடும் விளையாட்டு ஏராள நன்மைக்கு விளையாட்டு ஏற்றதே மனிதர்க்கு விளையாட்டு ஏத்துவோம் காத்திடும் விளையாட்டு

அரும்பொருள்

ஏடை-ஆசை ஏதம்-துன்பம்