பக்கம்:விளையாட்டு உலகம்.pdf/86

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்த பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை


8() விளையாட்டு உலகம் வராமல், லாரியே வெற்றி வீரன் என்று வற்புறுத்தி ன்ை. மன உறுத்தலில் இனிக்காத இன்பமுடன் லாரி தங்கப் பதக்கம் பெற்றபோது, மன மகிழ்ச்சியுடன் எந்தவித வேதனையும் இல்லாமல் ரால்ப் வெள்ளிப் பதக்கம் பெற்றபோது, அவனது பெருந்தன்மையைப் போற்றி, அரங்கமே கைதட்டி வரவேற்று வாழ்த்தியது. ஒட்டப் பந்தய நிகழ்ச்சிகளில் போட்டியாளர் களாகப் புறப்பட்டு தவறுக்கு இடையே தகுதிபெற்று, மனமாற்றம் நிகழவேண்டிய கேரத்தில் மாறிவிட்டு, களைப்பும் இளைப்பும் தாக்கும்போது ஏற்பட்டது தவறு அல்ல என்று மன்னித்து மறந்த ரால்ப்கில்லும், தவறுக்கு வருந்திய லாரி லெட்டினனும் அன்றிலிருந்து ஆருயிர் நண்பர்களாக மாறிவிட்டனர். சிறிய தவறுக்கே சீறிப் பாயும் காம், சரித்திரம் படைக்க விருந்த பாதையை மறைத்துப் பெருங்குற்றம் செய்தவரை மன்னித்த மனத்தின் மாண்பினை எண்ணு வோம். விளையாட்டு உலகம் வழங்கும் இன்பச் செய்தி யான பண்புச் செய்திகளைப் படித்தும் கேட்டும் பின்பற்றி பெருவாழ்வு வாழ்வோமாக!