பக்கம்:விளையாட்டு உலகில் சுவையான சம்பவங்கள்.pdf/89

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இந்தப் பக்கம் சரிபார்க்கப்பட்டது.87
டாக்டர். எஸ். நவராஜ் செல்லையா
 


ஸ்போர்ட்ஸ் உலகம் என்ற ஆங்கில விளையாட்டுத்துறை வார இதழில் படித்தோம்.

பெருமகிழ்ச்சியையும் நிம்மதியையும் தரவேண்டிய பரிசானது, பெரும் சங்கடத்தில், அதுவும் தர்ம சங்கடத்தில் மாட்டிவிட்டிருக்கிறதே! விடவும் முடியாமல் ஏற்கவும் முடியாமல், இருதலைக்கொள்ளி எறும்பாக இருப்பவர்களை ஆட்டி வைக்கின்ற பரிசு படுத்தும் பாடு, கொடுமையான பாடுதான்.

பரிசுபடுத்தும் பாட்டைப் பார்த்தால் பரிசு என்றால் மற்ற வீரர்களும் வீராங்கனைகளும் வெகுவேகமாக ஓடிப்போனாலும் ஆச்சரியமேயில்லை தான்!