பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/13

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
1. கதையின் முன் கதை

உலக நாடுகளுக்கிடையே ஒப்பற்ற முறையிலே நடக்கின்ற விளையாட்டுப்போட்டிகளை, ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக்கிறோம். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை, உலக நாடுகளில் விரும்பி ஏற்று நடத்த விரும்புகின்ற ஒரு நாட்டில், பதினறு நாட்கள் தொடர்ந்து நடைபெறுகின்ற போட்டிகள் உலக முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.

விளையாட்டு வீரர்களின் விழுமிய புகழுக்கு முத்தாய்ப்பான வாய்ப்பை வழங்கும் ஒலிம்பிக் பந்தயங்களே, புதிய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று அழைக் கின்றார்கள்.

அப்படியென்றால், பழைய ஒலிம்பிக் பந்தயங்கள் என்று ஒன்று இருந்திருக்க வேண்டும் என்று எண்ணத் தோன்றுகின்றதல்லவா!

ஆமாம். பழைய ஒலிம்பிக் பந்தயங்களை பிரபல மாக நடத்திப் பெருமை பெற்ற நாடாகத் திகழ்ந்தது