பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22


மூடிய கையைத் திறக்க முயற்சித்தாலும், அவனது மூடிய கையை திறக்கவே முடியாதாம். இதில் என்ன விஷேஷம் என்ருல், இந்தக் கைமூடி திறக்கும் திறமை யானபோராட்டத்தில், மிலோவின் உள்ளங்கைக்குள் இருக்கும் மாதுளங்கனியை கொஞ்சங் கூட கசங்காமல் காப்பாற்றி வைத்துக் கொள்கின்ற அதிசயமான சக்தியை படைத்தவகை விளங்கியிருக்கிருன் மிலோ.

கை விரல்களின் வலிமைக்கு ஒரு கதை என்ருல், கடிய சுமைதாங்கும் கால்களுக்கும் ஒரு கதை விடாமலா இருப்பார்கள்! அதையும் கேளுங்கள்.

எண்ணெய் அதிகமாக பூசப்பெற்ற வழ வழப்பு நிறைந்த ஒரு பெரிய இரும்புத் தட்டின் மீது (Discus) அவன் ஏறி நின்று கொள்வானம்! ஆள் நிற்கும் பொழுதே நிலையாக நிற்க முடியாமல் வழுக்கி விழச் செய்யும் தன்மை வாய்ந்த தட்டின் மீது ஏறி நின்று கொண்டிருக்கும் மிலோவை, எத்தகைய பலவான் வந்து பிடித்துப் பிடித்துத் தள்ளிலுைம், அவனை அந்தத் தட்டிலிருந்து அப்பால் கீழே தள்ளி விட முடியாதாம். பயங்கரமாக வழுக்கும் தட்டின் இடத்திலும், கெட்டியாகப் பிடித்துக் கொள்கின்ற காலூன்றும் சக்தியைக் கொண்டிருந்தான் மிலோ.

o முன்னர் நாம் கூறியவாறு போட்டிக் களமான பிதியன் பந்தயங்களில்-வெற்றி வீரர்களுக்குப் பரிசாக மலர்வளையத்தால் முடிசூட்டுவதுடன்,ரிப்பனையும் மாலை யாக அணிவித்துப் பாராட்டுவதும் உண்டு. அந்த ரிப்பனை தன்முன் நெற்றியில் படுமாறு தலையைச் சுற்றிக் கட்டிக் கொண்டு விடுவாளும். பின்னர், தனது நெற்றி நரம்பினைப் புடைக்கச் செய்து, கட்டியிருக்கும்