பக்கம்:விளையாட்டு உலகில் வீரக் கதைகள்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

அதனை நன்ருகப் பயன்படுத்திக் கொண்டார்கள் இவன் எதிரிகள்.

எதிரிகள் கூடி, ஒரு பயங்கரமான திட்டத்தைத் தீட்டினர்கள், அதன்படி, ஒரு தங்கக் கோப்பையைக் கொண்டு டோய், அவன் இருந்த அறையில் ஒளித்து வைத்து விட்டு, டியோக்சிபஸ்ஸைத் திருடன் என்று குற்றம் சாட்டத் தொடங்கினர்கள். தான் திருட வில்லை என்று எவ்வளவோ மறுத்துப் பார்த்தும், யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை. அவனது அறையை சோதனையிட வேண்டும் என்று எதிரிகள் வற்புறுத் தினர்.

தங்கக் கோப்பையைத் தன் அறையில் கண்டதும், வீரனுக்கு அவமானம் தாங்க முடியவில்லை. இனிமேல் வாழ்வது மரியாதை அல்ல என்றும் மனம் நொந்து, டியோக்சிபஸ் தற்கொலை செய்து கொண்டு இறந்து போனன். வஞ்சகத்தால் தீர்த்துக் கட்டினுேம் என்று எதிரிகள் கைகொட்டி நகைத்து மகிழ்ந்தனர்.

வாழ்க்கையில் புகழ் அதிகமாக வரவர, புகழுக் குரியவன் பத்திரமாக இருக்க வேண்டும்; புத்தி சாலித்தனமாகப் பேச வேண்டும் சாதகம் தேடி சதி செய்திடக் காத்திருக்கின்ற எதிரிகளின் தந்திரத் துக்கு ஆளாகாமல், மிகவும் எச்சரிக்கையாகவும் வாழ வேண்டும் என்ற நீதியை உலகுக்கு உணர்த்துகின்ற வாழ்க்கையைத் தான் வாழ்ந்து காட்டியிருக்கிருன் டியோக்சிபஸ்.