71
மேலே திறந்த மேனியராகவே அவர்கள் ஓடினர்கள். ஆனல், அவர்களுக்கென்று தனியாக விளையாட்டு மைதானம் அமைந்திருந்தது.
வெற்றிபெற்ற வீராங்கனைக்கு ஆலிவ் மலர் வளையம் உண்டு. ஆண்களுக்குரிய பரிசு போல்தான், ஆனல், அதற்கடுத்து, அற்புதமான விருந்தும் உண்டு. அதாவது, ஹீரா தெய்வதற்குப் பலியிட்ட காளை மாட்டின் கறித்துண்டும் கிடைக்கும். வெற்றிபெற்ற வர்கள், தங்களைப் புகழ்கின்ற சிறப்புக் குறிப்புக் களுடன் சிலை எழுப்பிக் கொள்ளவும் அனுமதிக்கப் பட்டார்கள்.
இத்தகைய சிறப்புடன் ஒலிம்பிக் பந்தயங்கள் கிரேக்க நாட்டில் நடத்தப் பெற்றன. வலிமையான தேகத்தைப் பெற்று. வாழ்வாங்கு வாழ்ந்த அவர்கள், வரலாற்றில் வானளாவிய புகழுடன் வாழ்கின்றனர்.
தங்கள் தேகத்தில் திறமும் திறனும் நிறைந்திருந்த நாட்களின் தேனினுமினிமையாக, அவர்கள் வாழ்க்கை ஒடிக்கொண்டிருந்தது. அவர்களிடையே திறம் குறைய ஆரம்பித்ததும், வாழ்க்கைத் தரமும் குறையத் தொடங்கியது. ரோமானியர்களிடம் தோற்றனர். அவரிகள் கட்டிக் காத்த ஒலிம்பிக் பந்தயம் காற்றி லடிபட்ட_பட்டமாகத் துடித்தது. கடைசியில் நூல றுந்த பட்டமாகியது. இறுதியில் தேய்ந்தே அழிந்தது. அதைத்தான் கிப்னிஸ் என்ற வரலாற்ருசிரியர் கூறுகிருர்,
அநேக நாடுகள் எவ்விதச் சுவடும் இல்லாமல் அழிந்தே போயின. காலமெல்லாம் வரலாறு வடித்துக் காட்டுகின்ற உண் மையாகவே நம்மிடையே