பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/133

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
132


198ஆவது முறையாக கடக்கின்ற ஒரு ஒலிம்பிக் பந்தயத்தில் ஒரு நாள் குத்துச் சண்டை கடக்க இருக்கின்ற கேரத்தில் போட்டியிட வேண்டிய நான்கு பேர்களில் ஒருவன்தான் இருக்கிருன். கட்டுக்காவலையும் மீறி, ஏனைய மூன்று பேர்களும் ஒலிம்பிக் அரங்கத்தை விட்டே ஓடிவிட்டிருக்கின்றனர்.

வந்திருக்கும் இளைஞனே தன்னையே வெறறி வீரகை ஆக்க வேண்டும் என்ற கிலையில் செம்மாந்தப் பார்வையுடன் கிற்கிருன். ஒடிப் போனவர்களைப் பற்றிய விபரங்கள் உடன் வராமலா இருக்கும்: உண்மை அப்பொழுதுதான் தெரிய வருகிறது.

ஒடிப்போன மூன்றுபேரும்,`` எபிலஸ் என்ற அந்தக் குத்துச் சண்டை வீரனிடம்`` லஞ்சம்” வாங்கிக் கொண்டு போட்டியில் இருந்து விலகி ஓடிவிட்டனர். அந்த மூவரையும் சக்தித்து, லஞ்சம் கொடுத்து தன்னை வெற்றி வீரனுக்க வேண்டுமென்று அவன் வேண்டிக் கொண்டானம். அவர்களும், அவன் ஆசையை கிறை வேற்ற பணத்தைப் பெற்றுக் கொண்டு பறந்தே போய்விட்டார்களாம்.

உண்மை வெளிவந்து விட்டது. அதிகாரிகள்`` எபிலஸ் என்ற அந்த ஊழல் பேர்வழிக்கு அபராதம் விதித்தனர். போட்டியில் இருந்து விலக்கினர். சிலையும் எடுத்தனர்.

ஊழலுக்குச் சிலை

ஊழல் செய்தவனுக்குச் சிலையா? ஆமாம்! குறுக்கு வழிகளிலும், கீழ்த்தரமான செயல்களிலும் பந்தயங் களில் வெற்றி பெற முயன்ற அத்தனைப் பேர்களுக்கும்