பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

71 ஆண்களுக்கான ஒலிம்பிக் பந்தயத்தில் தரும் பரிசு, புனிதமான ஆலிவ் மலர் வளையம் என்பதை அனைவரும் அறிவோம். அதுபோலவே பெண்களுக்கான போட் டியில் வெற்றி பெற்றவர்களுக்கும் ஆலிவ் மலர் வளையம் கிடைக்கும். அத்துடன் ஹீரா என்ற பெண் கடவுளுக்குப் பூசையிட்டுப் பலியிட்ட இளங் கன்றின் கறித துண்டும் பங்காகக் கிடைக்கும்.

இத்தனை வீரச் செயல்களும் ஆண்கள் அறியாமல் மறைவாகவே கடந்தன. வெளியே யாருககும் அறிவிக் கவும் இல்லை. சான்றுகளும், குறிப்புகளும்கூட மறைக் கப்பட்டன . பிரனிஸ் என்ற பெண்மணியின் வீரச் செயலுக்குப் பிறகே, பந்தயத்தில் பெண்களுக்கான சம உரிமை கிடைத்தது. அதன் பயனுக 128வது ஒலிம்பிக் பந்தயத் நில, பெலிச்சி என்ற பெண், ஆண்களுக்கிடையே நடந்த தேரோட்டப்போட்டியில் கலந்துகொண்டு, முதலாவதாக வந்து வெற்றி அடைந்திருக்கின்ருள் . இவவாறு, சீரும் சிறப்புமாகப் பெண்குலம் விளையாட்டுப் போட்டிகளில் வீரமுடன் பங்கு பெற்று வந்த பொழுது, கிரேக்கம் ரோமர்களிடையே சிக்கியது. கிரேக்கம் சிதைந்தது போலவே, அவர்கள் போற்றி வார்த்தப் பந்தயங்களும் சிதறின, சீரழிந்தன, செய லிழந்து அழிந்தொழிந்தன.

புதிய வெள்ளம் அதற்குப் பிறகு விளையாட்டுச் சரித்திரத்தில், விளயாட்டுக்கள் பற்றிய குறிப்புக்கள் அங்கொன்றும், இங்கொன்றுமாகவே தோனறின. 1896ஆம் ஆண்டு,