பக்கம்:விளையாட்டு விருந்து.pdf/91

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
11. ஒடுங்கள் பார்க்கலாம்!

மைதானம் வரவேற்கிறது

வண்ண வண்ணக் காகிதத் தோரணங்கள் காற்றிலே சலசலக்கின்றன. விளையாட்டு மைதானத் தரையிலே வெள்ளைக் கோடுகள் பளபளக்கின்றன. ஆங்காங்கே அழகுக் கொடிகள் அசைந்தாடி. ஆர்வ முள்ள மக்களை அழைக்கின்றன. வந்தவர்களை மகிழ்வுடன் வரவேற்கின்றன.

மக்கள் கூட்டத்தின் விழி மலர்கள் மைதானம் கோக்கி மலர்கின்றன. பந்தயத்தில் பங்கு பெறும் வீரர்கள் தங்களை உடலைப் பதப்படுத்திக் கொண் டிருக்கின்றனர். இளமை துள்ளும் மேனியில் வியர்வை வெள்ளம் துள்ளித் தெறித்து விழுந்து, மேனியை மேலும் கவர்ச்சிகரமாகக் காட்டிக் கொண்டிருக்கிறது.

பந்தயத்தை கடத்தும் அதிகாரிகள் பரபரப்புடன் செயல்படுகின்றனர். துடிதுடிப்புடன் பணிகளைத் துரித கதியில் இயக்குகின்றனர். ஒலிபெருக்கியில் பந்தய வீரர்களின் பெயர்கள் படிக்கப்படுகின்றன.