பக்கம்:விளையாட்டு விழா நடத்துவது எப்படி.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
எஸ். நவராஜ் செல்லையா 25


நிகழ்ச்சிகளையாவது, அருகே இருந்து முழுதாகப் பார்த்து மகிழும் வாய்ப்பு ஏற்படும்.

இரண்டு நிகழ்ச்சிகளை ஏறத்தாழ ஒரே சமயத்தில் நடத்தினால் ஆங்காங்கே உள்ளவர்கள், அருகாமையில் நடக்கின்ற போட்டி நிகழ்ச்சிகளைப் பார்த்து, அமைதியாகவும் ஆனந்தத்துடனும் அமர்ந்திருப் பார்கள்.

இல்லையென்றால் சிலர் எட்டிப் பார்ப்பதற்காக எழவும், இன்னும் சிலர் அவர்களைத் தட்டி உட்காரச் சொல்லித் தடுக்கவும், பிறகு போட்டி நடக்கின்ற இடங்களுக்கு அருகாமையில் சிலர் கூடி வந்து கூட்டம் போடவும், அவர்களை அகற்றப்போய் குழப்பம் ஏற்படக் கூடிய நிலைமையும் உண்டாகும்.

ஆகவே, சிறிது சிந்தித்து செயல்படுவது நல்லது. பந்தயத்திடலில் எவ்வாறு இடங்களைப் பொருத்தி அமைக்க வேண்டும் என்று இடப் பரப்பை பார்த்தே அமைக்க வேண்டும்.

முதலில், தாண்டும் போட்டி நிகழ்ச்சிகளுக்குரிய இடத்தையும், அதைத் தயார் செய்யும் முறைகளையும் காண்போம்.

1.நீளத் தாண்டல் (Long Jump)

வேகமாக ஓடிவந்து, வலுவாகக் கால்களை ஊன்றித் தாண்டிக் குதிப்பதற்கான பரப்பளவு மிகவும் அவசியமானதாகும்.

தாண்டிக் குதிப்பதற்கான நீளம், தாண்டும் இடத்திலிருந்து குதிக்கும் இடம் வரையிலான தூரம்