பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/4

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசிரியர் முன்னுரை விளையும் பயிர் முளையிலே தெரியும்’ என்னும் இந் - o 哆 g த நூலில் அறிவியல் அறிஞர் பதினால்வர் அறிமுகம் செய்யப் பெற்றுள்ளனர். - குறிப்பாக, இளைஞர்கள் படித்து, இந்த அறிவியல் அறிஞர்களைப்போல், இந்தக் கணிப்பொறி காலத்தில் . விண்ணிலே வீடுகட்ட முயலும் இந்தக் காலத்தில் - தாமும் ஆய்வு செய்து, இயற்கையில் மறைந்து கிடக்கும் உண்மை களை வெளிப்படுத்தி மக்கள் பலரின் அறியாமையையும் மூடப்பழக்க வழக்கங்களையும் போக்கவேண்டும். பெற்றோர்களும் ஆசிரியர்களும் பிள்ளைகட்கு அறிவியல் நாட்டம் உண்டாவதற்கு ஏற்ற சூழ்நிலையை உருவாக்கி உறுதுணை புரிய வேண்டும். . இவ்வாறு பிள்ளைகட்கு நல்ல வாய்ப்புதரின், அவர்கள் முளையிலேயே நன்கு வளர்ந்து மேனி கண்டு நல்ல விளைவு தரும் பயிர்போல், போகப் போகச் சிறந்த முறையில் செயலாற்றி வீட்டிற்கும் நாட்டிற்கும் பயன் விளைப்புர். இந்த நூலின் நோக்கம் இதுவே. இந்த நூலில் கி. மு. என்று குறிப்பிடப்பட்டுள்ள ஆண்டுகளைத் தவிர, மற்ற ஆண்டுகள் எல்லாம் கி. பி. ஆண்டுகளாகும். - முதியோர் இலக்கியப் பண்ணைப் பயிற்சி பெற்றுள்ள யான், புதிதாய் எழுத்தறிவு பெறும் வயது வந்தோர்க்கும் சிறார்கட்கும் மற்றும் தொடக்கப்பள்ளி மாணாக்கர்கட்கும் பயன்படும் வகையில், அறிவியல் செய்திகளைச் சுருங்கச் சொல்லி விளங்க வைத்தல்’ என்னும் முறையிலும் எளிமையாய்ப் புரிந்து கொள்ளும் வகையிலும் இந்நூலை எழுதியுள்ளேன். கல்வித் துறையினரின் பேராதரவைப் பணிவுடன் வேண்டுகிறேன். பொதுவாக இந்நூலைப் பெரியவர்களும் படிக்கலாம். நூலை நன்முறையில் அச்சிட்டு உதவிய சபாநாயகம் அச்சகத்தாருக்கு மிக்க நன்றி செலுத்துகிறேன். வணக்கம் சுந்தர. சண்முகன்