பக்கம்:விளையும் பயிர் முளையிலே தெரியும்.pdf/74

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சுந்தர. சண்முகனார் 73 யர்களின் நடுவிலே பணி புரிந்த சந்திரபோசுக்கு இந்த நிலை ஏற்பட்டதில் வியப்பு ஒன்றுமில்லை. பணிகள் இயற்கையில் பொதிந்து கிடக்கும் உண்மைகளை வெளிக் கொணர்வதில் போஸ் மிகுந்த கவனம் செலுத்தினார். மின்சாரக் கதிர் வீச்சு (Electric Radiation) பற்றி ஆய்வு மேற்கொண்டார். கம்பியில்லாத் தந்தி முறை ஆய்வில் போஸ் ஈடு பட்டார்; கல்கத்தாவில் 1895 ஆம் ஆண்டு, கல்கத்தா மாநில ஆளுநர் (கவர்னர்) முன் தம் ஆய்வைச் செயல் படுத்திக் காட்டினார்; ஒர் அறையில் இருந்து கொண்டு கம்பியில்லாத் தந்தி முறை மூலம் அடுத்த அறையில் இருந்த ஒரு மணியை ஒலிக்கச் செய்தார்; இந்த ஆய்வு வெற்றிக்காகப் பெரிதும் பாராட்டப் பெற்றார். வாய்ப்பு இழப்பு இப்போது யாரையாவது பார்த்து, தந்தியில்லாக் கம்பி முறையைக் கண்டுபிடித்தவர் யார் என்று வினவினால், உடனே மார்க்கோனி என்ற பதில் வரும். மார்க்கோனி என்பவர் இங்கிலாந்தில் ஆய்வு செய்த இத்தாலியர். இந்தப் பெருமை சந்திரபோசுக்குக் கிடைக்க வேண்டியது. போசும் இதைக் கண்டு பிடித்தார். ஆனால், போசுக்கு முன் மார்க்கோனி தமது கண்டு பிடிப்பை வெளியுலகில் வெளியிட்டு விட்டார். அதனால் போசுக்கு வாய்ப்பு நழுவிவிட்டது.