மாற்றுக் கட்சியினர், அவருடைய உடல்நலத்தைப் பேணிய மருத்துவர்கள், விமானம் ஓட்டியவர்கள், முடிவெட்டியவர்கள் ஆகியோரைச் சந்தித்து அவர்கள் தெரிவித்த தகவல்களின் அடிப்படையில் அமைந்த நூலே இது; நெருங்கிப் பழகி சொந்த அனுபவத்தில் எழுதப்பட்ட நூல் அன்று. தமிழக அரசாங்கத்தின் தலைமைச் செயலகத்திலும், ஆவணக் காப்பகத்திலும் உள்ள ஆதாரங்களையும், சட்டசபை, மேலவை நிகழ்ச்சிகளையும் படித்துப் பார்த்துக் குறிப்புகளை எழுதிக் கொண்டேன். இதற்குத் தேவையான இசைவை வழங்கிய தமிழக அரசாங்கத்திற்கும் தலைமைச் செயலர் திரு.வி. கார்த்திகேயன், ஐ.ஏ.எஸ். அவர்கட்கும் என் நன்றி உரியது. ஆவணக் காப்பகத்தின் ஆணையர்களான திரு.எஸ்பி. இளங்கோவன் ஐ.ஏ.எஸ்.,திரு.ஏ.என்.நடராஜன், ஐ. ஏ. எஸ். மற்றும் அலுவலர்கள் ஆகியோர் செய்த உதவியை அங்குள்ள மறப்பதிற்கில்லை. . இந்த ஆராய்ச்சிக்குத் தேவையான அனைத்து வசதிகளையும் திரு. மகாலிங்கம் அவர்கள் பேரன்புடன் செய்து கொடுத்ததோடு தக்கவர்களுக்கு அறிமுகக் கடிதங்களும் வழங்கினார்கள். ரெட்டியார் சமூகத்தைச் சமூகத்தைச் சேர்ந்த பெருமக்கள் இந்த முயற்சியை வரவேற்று ஒரு வேண்டுகோளை அச்சிட்டனர். அதைப் படித்த சிலர் என்பணியில் ஒத்துழைக்க முன்வந்தனர். துறவிகளையும் அரசியல் தலைவர்களையும் எழுத்தாளர் களையும் அலுவலர்களையும் - தமிழ் நாட்டில் வாழும் 70 வயதுக்கு மேற்பட்ட முக்கியமானவர்களையும் சந்தித்து அவர்களுடைய - ஆசியைப் பெறும் பேற்றினை எனக்கு இந்தப் பணி நல்கியது. 20, 25 ஆண்டுகளுக்கு முன் வேறு நிலைகளில் நான் அறிந்திருந்த பெருமக்களின் நட்பைப் புதுப்பித்துக் கொள்ளவும் நேரிட்டது. எனக்கு உதவி செய்தவர்களின் நீண்ட பட்டியலை நூலின் இறுதியில் காணலாம். தங்களுக்குத் தெரிந்த நிகழ்ச்சிகளைக் கூறியும் தங்களிடமிருந்த கடிதங்களையும் நூல்களையும் அளித்தும்,
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/15
Appearance