உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இவர்களிடையே வழங்கும் பழமொழி. தங்கள் வீட்டுக்கு எதிரில் மாட்டுப்பண்ணை வைத்து, அதில் கறவை மாடுகளையும் உழவு பாடுகளையும் வண்டிமாடுகளையும் பேணி வருகின்றனர். தமிழ்நாட்டுக்கு வந்தபோது இவர்கள் அனைவரும் வைணவ, ராக இருந்தனர். தமிழ் நாட்டில் லிங்காயத மடங்கள் தோன்றிய பின்னர் இவர்களில் பாதிப்பேர் சைவராயினர். எஞ்சிய பாதிப் பேர் வைணவராகவே இருந்து வருவாராயினர். சைவ வைணவ பேதமின்றி, இவர்கள் சம்பந்தம் செய்து கொள்கின்றனர். ரெட்டியார்கள் அனைவரும் தோற்றப்பொலிவும், உடற் கட்டும் உடையவர்கள். சைவ உணவையே உட்கொள்கின்றனர். புலால் உணவினை மறந்தும் மறத்தும் உண்ணார். பச்சரிசி உண்ணும் பழக்கமும் இவர்களிடம் நிலவுகிறது. மேற்கண்ட இயல்புகள் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியார் அவர்களிடமும் இருந்தன. தென் ஆர்க்காடு மாவட்டத்திலும் புதுச்சேரியிலுமாக ரெட்டியார்கள் மூன்று இலட்சம் பேர் உள்ளனர். மாண்டேகு செம்ஸ்போர்டு சீர்த்திருத்தச் சட்டங்களின்படி சென்னை இராசதானியின் முதலமைச்சர் பதவியை முதல் தடவையாக வகித்த சுப்பராயலு ரெட்டிசார், புதுச்சேரி மாநிலத்தின் முதல்வராக இருந்த வெங்கடசுப்பா ரெட்டியார் ஆகியோர் இவ்வினத்தவருள் குறிப்பிடத்தக்கவர். குடும்பம் ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாருடைய குடும்பம் அந்த ஊரில் பரம்பரையாக மணியக்காரக் குடும்பமாகும். எனவே இவர்களுக்கு வழிவழியாக நிறைந்த செல்வாக்கு இருந்தது. சியில் 1. திவான் பகதூர் அ.சுப்பராயலு ரெட்டியார் (1855-1921). இவர் கிரியனல் வழக்கறிஞராகப் பெரும்புகழ் பெற்றதோடு ஜஸ்டிஸ் கட்சியின் முக்கியமான தலைவர்களுள் ஒருவராகவும் திகழ்ந்தார். கடலூரிலிருந்து பாகூர் - தூக்களப்பாக்கம் செல்லும் வழியில் 18 கி.மீ. தொலைவிலுள்ள மலையப்பெருமாள் அகரம் என்னும் ஊரினர். இவர் குடும்பத்தாரும் பரம்பரை மணியக்காரர் ஆவர். இவர் 1906 முதல் 1920 வரை கடலூர் நகராண்மைக் 1920-21 இல் தலைவராகவும் கழகத்தின் முதலமைச்சராகவும் பதவி வகித்தார். இப்பதவிகளையும் தென் ஆர்க்காடு மாவட்டக் கழகத்துத் தலைமைப் பதவியையும் பெற்ற முதல் இந்தியர் இவரே என்பது குறிப்பிடத் தக்கது. பிற்காலத்தில் முதலமைச்சராக இருந்த பனகல் அரசர், சென்னை மாநில கவர்னர் சர் கே.வி. ரெட்டி ஆகியவர்கள் சுப்பராயலு ரெட்டியாரின் அமைச்சரலையில் உறுப்பினராக இருந்தனர். 7