திருமண வீட்டில் சண்முகம் செட்டியாரை ஓமந்தூரார் சந்தித்து நாட்டின் அரசியல் பிரச்சினைகளை அலசி ஆராய்ந்தார். அரசியலில் அவர்கள் இருவருடைய கருத்துக்களும் இரு வேறு துருவங்களாக இருந்த போதிலும், ஓமந்தூரார் அன்று தொடங்கி இறுதிவரை சண்முகம் செட்டியாரிடம் மிகமதிப்பு வைத்திருந்தார். முதலமைச்சராக இருந்தபோது ஓமந்தூரார் பரிந்துரைத்ததன் காரணமாக, சண்முகம் செட்டியார் சென்னைச் சட்டசபையி லிருந்து காங்கிரஸ் வேட்பாளராக அரசியல் நிர்ணய சபைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியல் நிர்ணய சபையே இடைக் கால நாடாளு மன்றமுமாக இருந்தது. எனவே, சண்முகம் செட்டியார், சுதந்திர இந்தியாவின் முதல் நிதி அமைச்சராக நியமனம் பெற்றதற்கு ஓமந்தூராரே காரணமாவார். 1947-இல் நடந்த இந்த தேசிய முக்கியத்துவம் பெற்ற நிகழ்ச்சிக்கு வித்திட்டது 1917-இல் இராதாபுரம் திருமண வீட்டுச் சந்திப்பு. வெங்கந்தூர் கணபதி சாஸ்திரி விழுப்புரத்திலிருந்து 10 கி. மீ தொலைவில் வெங்கந்தூர் என்னும் சிற்றூர் இருக்கிறது. அவ்வூரினரான கணபதி சாஸ்திரி என்பவர், சமஸ்கிருதத்திலும் சமய இலக்கியங்களிலும் புலமை பெற்றிருந்ததோடு தேசியவாதியாகவும் இருந்தார். தென் ஆர்க்காடு மாவட்டத்தில் காங்கிரஸ் இயச்சத்தை 1912-ஆம் ஆண்டில் ஆரம்பித்தவர் இவரே. இவர் மாவட்டத்திலுள்ள சில நகரங்களுக்குச் சென்று தேசியத்திற்கு அடிகோலிய போது ஓமந்தூராரும் இவருடன் சென்றார். 1918-ஆம் ஆண்டு 1918-ஆம் ஆண்டு முழுவதும் ஓமந்தூரார் நாட்டின் அரசியல் நிலைமையை மிகக் கூர்ந்து ஆராய்ந்துகொண்டிருந்தார். பொது வாழ்க்கையில் முழு மூச்சாக ஈடுபடுவதற்கான வாய்ப்பை எதிர் பார்த்துக் கொண்டிருந்தார். 23
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/44
Appearance