திரு.சர்தார் அ.வேதரத்தினம் அவர்கள் வேதாரண்யத்தில் ஏழைப் பெண்களின் நல்வாழ்வை பேணும் அமைப்பாக கஸ்தூர்பா காந்தி கன்யா குருகுலம் அமைத்து காந்திய வழியில் பணியாற்றியவர்கள். இந்த அமைப்புகள் இன்றும் தொடர்ந்து நல்ல பணி புரிந்து வருகின்றது. வேதாரண்யத்தில் குருகுலத்தின் மூலம் நல்ல நூல்கள் பல கொண்டு வரவேண்டும் என்ற ஆவலுடன் ஒரு பதிப்பகமும் பெண்களால் நடத்தப்பட்டு வருகின்றது. இதுவரை நல்ல நூல்கள் சில வந்திருக்கின்றது. அந்த முறையில் குருகுலத்துடன் நெருங்கிய தொடர்புடைய திரு.ஓ.பி.ஆர். அவர்கள் வரலாறும் குருகுலத்தின் மூலம் வெளிவருவது மிகவும் பொறுத்தமாக இருக்கும் என்று ஆவல் கொண்டோம். ல . குருகுலம் பணியில் மிகவும் ஈடு பாடு கொண்டு குருகுலத் தந்தையவர்கள் காலமான பிறகு பலவகையிலும் பொருளுதவியும் ஆக்கபூர்வமான ஆலோசனைகளும் சொல்லி குருகுலம் சிறந்து வலுப் பெற்று வளர்வதற்கு உதவி வருகின்றவர்கள் பொள்ளாச்சி வள்ளல் திரு. நா.மகாலிங்கம் அவர்கள். அவர்கள் உதவி இல்லா விட்டால் இந்த அளவு வளர்ச்சிகாண முடியுமா என்பது சிந்திக்க வேண்டிய ஒன்று. தனது இளமைப் பிராயம் முதலே தொண்டு உள்ளத்துடன் தனது பொருளீட்டும் திறன் அனைத்தும் காந்தியடிகளின் தர்மகர்த் தாக்கொள்கைகளுக்கு இணங்க பயன் உள்ள வகையில் பயன் படுத்தி வருகின்ற பாங்கு தமிழகம் அறியும். அதிலும் வடலூர் வள்ளல் அருட் பெருஞ்ஜோதி ஆண்டவர் அடிச்சுவட்டைப் பின்பற்றி அன்பு, அருள் உள்ளத்திலே திளைத்து வாழ்கின்றவர்கள். தமிழர் நாகரிகத்தின் தொன்மை பற்றி பல வானநூல் வல்லு நர்களைக்கொண்டு பெரும் ஆராய்ச்சியும். திரு. நா. மகாலிங்கம் அவர் கள் செய்து வருகிறார்கள். இது வரை அவர்கள் ஆராய்ச்சியின் மூலம் தமிழர் நாகரிகம் முப்பதாயிரம் ஆண்டு பிராயம் உள்ளது என துணிய இடம் இருக்கிறது. இத்தகைய நல்ல ஆராய்ச்சிப்பணி இவர்களுக்கே தகும். அவர்களுக்கு திரு.ஓ.பி .ஆர் . அவர்கள் வரலாற்றைத் தொகுக்க வேண்டும் என்ற ஆர்வம் மிகுந்ததில் வியப்பில்லை. தனது முயற்ச்சி ஊக்கத்தால் ரூபாய் பத்தாயிரத்திற்குமேல் செலவிட்டு இந்நூல் வெளிவர பெரிதும் நமது ஆசிரியர் திரு. சோமலெ அவர்களை ஊக்குவித்திருக்கின்றார்கள். திரு.சோமலே அவர்களும் உலகம் பூராவும் சுற்றி பலருடன் பழகி நல்ல ஆழ்ந்து அனுபவம் உள்ளவர்கள்/
பக்கம்:விவசாய முதலமைச்சர்.pdf/5
Appearance