இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
நல்ல வரவேற்பைப் பெறும் என்றே நம்புகின்றோம். அவரியம் இளம் தலைமுறையினர் இதைப் பெற்றுப் பயன் பெறுவர் என்று நம்புகின்றோம். இப்புத்தகத்தை குருகுல அச்சுப்பள்ளி மாணாக்கியர்கள் மிகவும் உற்சாகத்துடன் செய்து முடித்திருக்கின்றனர். அவர்களுக்கும் இந் நூலை ஆக்குவதில் நல்ல ஊக்கம் இருந்திருக்கின்றது. இல்லா விட்டால் இந்த குறுகிய காலத்தில் இந்நூல் அச்சாகி வெளிவருவது சிரமமாக இருந்திருக்கும். அச்சகத்தைச் சார்ந்த அனைவருக்கும் நான் பெரிதும் கடமைப்பட்டவன் ஆவேன். குருகுலத்தின் எங்கள் இந்த முயற்ச்சிக்கு அனைவரின் ஆதரவை யும் வேண்டிக்கொள்கின்றேன். வேதாரண்யம் 25-12-79 } வே. அப்பாக்குட்டி, மானேஜிங் டிரஸ்டி, குருகுலம்.