பக்கம்:விவாகமானவர்கட்கு ஒரு யோசனை.pdf/152

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

H 50 - விவாகமானவர்களுக்கு - கொலைப் பாவம் கர்ப்பத்தடை செய்யும் பொருட்டுப்_பெண் குறிக்குள் மருந்துகள்ை வைத்து சுக்கில உயிர்களைக் கொள்வது பாவ மல்லவா என்று சிலர் கேட்கிருர்கள். ஆம், கொலைதான். ஆனல் மனிதன் கொஞ்சமும் கொலை செய்யாமல் உயிர் வாழ் முடியும்ா? ஆராய்ந்து பார்ப்போர்_முடியாது என்ற முடிவுக்கே வருவார்கள். நாம் மூச்சு இழுக்கும்போதும், உண்ணும்போதும், குடிக்கும்போதும் கோடிக்கணக்கான நுண்ணுயிர்கள் நம்முடைய உடம்பினுள்ளே செல்கின்றன. அவைகளை எல்லாம் நம்முடைய ரத்தம் அனவரதமும் கொன்றுகொண்டே இருக்கிறது. அப்படி அது கொல்லாமற் போனல், அந்த உயிர்கள் நம்மைக்கொன்று தீர்த்துவிடும், அது மட்டுமா? நாம் நடக்கும் போதும், உட்காரும்போதும் எத்தனை உயிர்கள் நாசமடைகின்றன! நாம் நீரைக் கொதிக்க வைக்கும்போதும், சாக்கடையைக் கழுவும் போதும், வீட்டை வெள்ளை யடிக்கும்போதும், சாகும் உயிர்கள் ஒன்ரு இரண்டா? ஆல்ை இந்தக் காரியங்களைச் செய்யாவிட்டால் நம்முடைய வாசஸ்தலம் யமலோகம் தானே. டாக்டர்கள் நம்முடைய உடம்புகளில் சதை வளர்ந் திருந்தால் வெட்டி விடுகிருர்களே. அந்தச் சதை என்பது உயிரற்ற வஸ்துவா? இல்லையே. அது லட்சக் கணக்கான நுண்ணுயிர்த்திரளே யாகும். அப்படி டாக்டர்கள் ஆப்ப ரேஷன் செய்வதை யாரேனும் கொலை - பாவம் - வேண் டாம் என்று கூறுகிருர்களோ? அது போகட்டும், சம்போகமில்லாமலே சில சமயங் களில் விந்து வெளியாகிறதே, அப்படி ஒரு சமயம் வெளி யாகும் விந்தில் ஐம்பது கோடி சுக்கில உயிர்கள் இருப்பதாக டாக்டர்கள் கூறுகிருர்களே, அவைகள் எல்லாம் வீணுக மடிந்து போகின்றனவே, அதற்கு யார் ஜவாப்தாரி? சம்போகம் செய்து விந்து வெளியாகும் பொழுதெ லாம் கர்ப்பம் உண்டாவதில்லையே. அப்படி கர்ப்பம் உண், டாகாவிட்டால் அதிலுள்ள உயிர்கள் எல்லாம் அந்தகனுல குதானே சென்று விடுகின்றன. அதை யாரேனும் தடுக்க முடியுமா? f