பக்கம்:விஷக்கோப்பை.pdf/101

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

96

விஷக்கோப்பை


96 விஷக்கோப்பை

ளாக இருந்தால், நீ எங்கிருந்தாலும் அவர்கள் உம் குழந்தைகளை நிச்சயமாகக் காப்பாற்றுவார்கள். சாக்ரடீஸ் வாழ்வையும் உன் மக்களையும் பற்றி முதலில் எண்ணுதே. நீதிதான் சிறந்தது. மறு உலகத்திலுள்ள நீதி வழுவா மன்னர்கள் உனக்கு நியாயம் வழங்குவார்கள். கிரிடோ சொல்வதைப் போல் செய்தால், நீயோ உனக்கு வேண்டியவர்களோ இம்மையிலும் சரி மறுமையிலும் சரி, சிறந்தவர்க ளாகவோ, நேர்மையுள்ளவர்களாகவோ, நியாயம் உள்ளவர்களாகவோ இருக்க முடியாது. இப்படியே நிரபராதியாக இறந்துவிடு. துன்பம் அனுபவிப் பவனகவே இறந்துவிடு. நீதியை நேசித்தவகை இறந்துவிடு. நேர்மையாளன் என்ற நற் பெயரோடு இறந்துவிடு. அஞ்சா நெஞ்சன் என்ற கெளரவத் தோடு இறந்துவிடு. கெட்டவகை இறக்காதே! சட்டம் உன்னைப் பலி கொள்ளவில்லை. மனிதர்களே உன்னைப் பலி கொள்கிருர்கள். எங்கள்மேல் சீற்றம் கொள்ளாதே. நாங்கள் தவறுடையவர்கள் அல்ல. எங்கள் கண்களுக்கு எல்லாரும் சமம். எங்களுக்கு எந்த பேதமும் இல்லை என்று சட்டங்கள் சொன்னல் என்ன செய்வது கிரிடோ. கிரிடோ : (கண் கலக்கம்) மெளனம். சிறையில் நடந்த சாக்ரடீஸ் முடிவைப்பற்றி கிரிடோ சொல்கிருன் சாதாரணமாய் நானும் சில நண்பர்களும் ஒவ் வொரு நாளும் அதிகாலையில் சிறைச்சாலைக்குப்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விஷக்கோப்பை.pdf/101&oldid=1331484" இலிருந்து மீள்விக்கப்பட்டது