பக்கம்:வீடும் விளக்கும்.pdf/131

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

130 விடும் விளக்கும் புற்று இருப்பவர்போல்தாம் காணப்படுவார்கள். ஆயி னும் உள்ளுக்குள் பற்றற்றவராகி, உயிர் இறுதியில் அடையவேண்டிய உண்மை உயர் நிலைக்குப் பெரிதும் பாடுபடுவார்கள். சிறுத்தொண்டர், திருநீலகண்டர், குலசேகரப் பெருமாள் முதலிய பெரியோர்கள் இதற்குப் போதிய சான்றாவார்கள். வீடும் விளக்கும்: எனவே, இவ்வில்லறத் துறவு நிலையே ஏனைய கிலைகளைக் காட்டிலும் இனியதாகும்; எளியதாகும்; சிறந்ததாகும்; தமக்கும் பிறர்க்கும் ஒருங்கு பயன் கொடுப்பதுமாகும் எனத் தெளியலாம். ஆனால், இங் நூலுள் கூறப்பெற்றுள்ள வீடும் விளக்கும் இல்லை யேல், புகழ்தற்குரிய இவ்வில்லறத் துறவு நிலைக்குச் சிறிதும் இடமில்லையன்றோ? எனவே, வரம்புகடந்த பெருமைக்குரிய இவ் விடும் விளக்கும் மக்கட்கு இன்றியமையாத பொருள்கள் என்பது இப்போது இனிது விளங்குமே! ২% عسسه བ།---- تعمیمی つ *%