பக்கம்:வீடும் வெளியும்.pdf/130

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 盈2黔 அவர் தங்கள் தவறை உணரவில்லை. அது தவறு என்றுகூட அவருக்குப் படவில்லை, இதிலே என்ன இருக்குது என்று அலட்சியப்படுத்தினர். மேலும் அவர் பேசிய தோரண காந்தியின் உள்ள்த்திலே க்சை படி மாதிரி தாக்கியது. உண்மை, உண்மை என்று ஜெபம் மாதிரி சொல் விக் கொண்டிருப்பதுகூட ஒரு மனமயக்கம்தான். நேற்று: உண்மையாக இருந்தது. இன்று உண்மை இல்லை என்ருகி விடலாம். உங்களுக்கு உண்மை என்று படுவது எனிக்கு அப்படிப் படாமலே போகலாம். பூமி தட்டை என்பதை உண்மை என்று நம்பினுர்கள், ஒரு காலத்தில். இல்ல்ை, பூமி உருண்டை என்ருகி விட்டது. சூரியன் சுற்றி வரு கிறது, தோன்றுது, மறையுது என்பது உண்மையாகக் கருதப்பட்டது. இல்லை. அது சரியல்ல சூரியன் ஒரே இடத்தில் நிற்குது. பூமியும் பிறவும் தான் சுற்றி வரு இன்றன; இதுதான் உண்மை என் மூர்கள். அப்படி இருந்தாலும்கூட, சூரியன் உதிக்கிருன், மறைகிருன் என்று சொல்கிற வழக்கமும் போய்விடவில்லை. பெரிய விஷயங்களிலேயே இந்தக் கதை என்ருல், சாதாரண காரியங்களில் உண்மை, ஆ ஊ என்று அவசியம் இல்லா மல் குழப்பிக் கொண்டிருப்பது புத்திசாலித்தனமாகாது. காலம் ரொம்பவும் மாறிப்போச்சு. அதுக்குத் தக்கபடி வாழ்க்கை முறைகளேயும் அட்ஜஸ்ட் செய்து கொண்டு போகனும். அப்போதான் நன்ருக வாழ முடியும். சத். தியம், உண்மை என்பது காட்டில் வாழ்கிற சந்நியாசி களுக்கும் மடங்களில் வாழ்கிற சாமியார்களுக்கும் சரி. அன்ருட வாழ்க்கையில், நம் போன்றவர்களுக்கு அது கட்டுபடியாகாத சங்கதி!' என்று ஒரே போடாகப் போட்டார் சுந்தரம். காந்திஜீயின் பெயரைச் சொல்லிக்கொண்டு, காந்தி வளர்த்த கட்சியில் இருந்து கொண்டு, நாட்டுப் பணி புரிவதாகப் பெயர் பண்ணும் ஒருவர் பேச வேண்டிய பேச்சா இது என்று அப்பாவி காந்திமதிநாதன் திகைத் துப் போனன். இத்தகைய திகைப்புகள் அவனுக்கு அடிக்கடி ஏற் பட்டுக் கொண்டிருந்தன. இதே ரீதியில் இந்த இடத்