பக்கம்:வீடும் வெளியும்.pdf/32

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வீடும் வெளியும் 3盈 சொக்கையா யோசனை சொன்ஞர். "அதை வைத்து, அருமையான பாட்டும் எழுதிவிடலாம். பற்றி எரியுதே தீ, தி: பாய்ந்து படருதே எங்கும்: பளபளக்கும் பட்டு எல்லாம் தகதகன்னு எரியுது பாரு சிலுக்கு மல்லு வகையரா சிரிப்பாய் சிரிக்குதே ஐயோ!' இப்படி, இன்னும் ஜோராக இசைக்கலாம்” என்று: உற்சாகமாகப் பேசினர் கவிராயர். பிறவிப் பெருமாள் தலையசைத்தார். "அருமை யாகத்தான் பாடுறே. இதை இன்னொரு சமயம் பார்த்துக்கொள்வோம். இப்போ சுதேசிக் கடை திறக் கிறது பற்றிப் பாடினல் போதும். இன்னுமொரு சங்கதி. நம்ம திருமலையப்பன காந்தி ஆளாக ஆக்கி விடலாம்னு பார்க்கிறேன். அதையும் சிறப்பாகச் செய்யனும், பால்குடம் எடுக்கிறது, காவடி துரக்குகிறது மாதிரி, ஊர்வலம், வழிநெடுகப் பாட்டு, ஆட்டம் எல்லாம் ஏற்பாடு செய்யப் போறேன் அதுக்கும் கவிராயர் காளமேகமாப் பொழிய வேண்டியது அவசியம்’ என்ருர். தம்பியும் மறியல் செய்யப்போகுதா? பெரிய வீட்டுக் காந்தி செய்தது மாதிரி?' என்று வியப்போடு கேட்டார் கவி. - இல்லே இல்லே! என்று மேடை முதலாளி அவசரமாகப் பதிலளித்தார். திருமலையப்பன் அவருடைய செல்வ மகன். பத்து வரை படித்துவிட்டு, 'படிப்பு ஏறவில்லை. நான் படித்து என்ன ஆகப் போகுது?’ என்று சொல்லி, புத்தங்களே வீசி அறிந்துவிட்டவன். பொழுது போகாமல் ஊரைச் சுற்றிக் கொண்டிருந்த அவனுக்கு ஒரு நல்ல வழி காட்டலாமே என்று எண்ணிஞர் தந்தை.