பக்கம்:வீரபாண்டியக் கட்டபொம்மு கதைப் பாடல்.pdf/198

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

193 விருப்பாச்சி மலையுமே போய்ச்சேர்ந்துவன வேடரைப் போலவே ஊமையனும் வடுப்படாமேனி வடுப்படத்தானிந்த வனங்களெல்லாந்திரிந்தலைந்து அன்னகாரமு மில்லாமல் தானங்கே அஞ்சாறு நாட்கள் வசித்திருந்து கன்னிவாடி மலேச்சீமையிலே ஒரு கன்னியிடத்திலே போய்ச்சேர்ந்து கையிலிருந்திடு மாயுதத்தை யந்தக் கன்னியிடத்திற் கொடுத்து வைத்து 7爵7@ நெய்யுடன் பாலமுதுண்டனராம் அங்கே நித்திரை செய்தாரே யன்னேரம். மங்கையுட வீட்டில் ஊமையன்தான்மதி மயங்கிநித்திரை செய்திடவே சிங்கம்போலே யவன் தானு:றங்கஅந்தச் சேயிழையாள் மனம்பதறி ஊமைத்துரை என்று தானறிந்துமெள்ள உட்தாப்பாள் போட்டுக் கதவடைத்து தாமதஞ்செய்யாமல் அம்பலத்தில் வந்து சாடைசொன்னளந்த மங்கையுந்தான். ?&母夺 ஆயிரம் பொன்னையும் தாருமென்ருளிந்த வாய்பேசா மன்னனைத்தானடைத்தேன். ஞாயமுனிசீபு அம்பலக் காரரே நான் சொல்லும்விண்ணப்பம் கேளுமென்முள். மெட்டுப்போலீசு அதிகாரிகள் மேன்மை பொருந்திய தலையாரி பட்டணத்துக் குடியோர்களே தானிந்த கெட்டிக்காரனைப் பிடிங்களென்ருள் டாளுபோலீசார் தயாரு செய்தார் அங்கே டப்பைக்குடிகளு உஷாராய் நின்ருர், 7290 வாணுத்தடி களுந்தானெடுத்துச் சிலர் வளரிக் கம்புகள் கைப்பிடித்து வீட்டையுஞ் சுத்திவளைத்தனராம் கதவின்மேலெட்டிப் பார்த்துமேநின்றனராம். முகத்தை முகத்தையே பார்ப்பாரும் நீதான் முன்னே போவென்று மொழிவாரும் ஊமையன் கெலிகளடங்குதென்று வீட்டுக் குள்ளேதான் போகப்பயப்படுவார்.