பக்கம்:வீரபாண்டியம்.pdf/27

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 கா வி ய சீ வி ய ம் அதிசய நிலையில் உலாவி வருகிற அரிய மேதைகளே பெரிய கவிஞர் எனப் பேர்பெற்று நிலவுகின்றனர். அறிவு நலன்களே வாரி வழங்கி வருகிற அளவு: அவர் சீரும் சிறப்பும் பெற்றுச் சிறந்து திகழ்கின்றனர். மனித இனம் புனிதமாய் உயர்ந்து உய்தி பெறச் செய்து வருபவரே மெய்யான கவிஞராய் மேவி மிளிர் கின்றனர். திருவள்ளுவரைத் தெய்வப் புலவர் என்று வையம் துதி செய்து வருகிறது: ஏன்? மாந்தர் ஆந்துனேயும் ஒதி யுணர்ந்து சாந்த சீலராய்ப் பேரின்ப நிலையை அடைய வுரிய நெறி முறைகளே வரன்முறையே அருளி யுள்ளமையால் கருணே வள்ளல் என அவரை யாவரும் உரிமையுடன் போற்றி வருகின்றனர். உலகம் போற்றி வர அவர் ஆற்றியுள்ளது எது? அது பெரிய ஒர் அதி சய நிலையாய் எவ்வழியும் திவ்விய ஒளிகளே வீசித் தேசுமீதுார்ந்து வருகிறது. அவருடைய எண்ணங்களைக் கவி உருவில் மருவாமல் வசன நடையில் எழுதியிருக் தால் அந்த நூலின் கிலே என்னம்: கிலேத்து நிற்குமா? கருத்துடன் எவரும் கருதி வருவரா? திருக்குறள் என் னும் பேர் வெளியே தெரிய வங்திருக்குமா? ஆயிரக் கணக்கான ஆண்டுகள் மாண்டு ஒழிந்தாலும் யாண்டும் மறையாமல், யா து ம் குறையாமல், எவ்வழியும் பேரொளி வீசி நீண்டு நிலவி வருவது எதல்ை? செய் யுள் உருவில் செய்தமையாலேதான் பொய்யாமொழி என்று பேர்பெற்று எவ்வழியும் மெய்யான ஒளிகளே விசி யாண்டும் மேலோங்கி அது விளங்கி வருகிறது. கவியுள் ஒரு தெய்வீக கிலே கனிந்துள்ளது. ஆகவே அத்தகைய உத்தமக் கவிகளே உலகம் கலமுற இயற்த வல்லவர் தெய்வப் புலவர் என நேர்ந்தனர். “The poets are liberating gods.” (Emerson) கவிஞர் சுதந்தர தேவதைகள்' இந்த ஆங்கில வாசகம் ஈங்கு ஊன்றி உணர

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/27&oldid=912721" இலிருந்து மீள்விக்கப்பட்டது