பக்கம்:வீரபாண்டியம்.pdf/519

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இ ரு பத் ைத ந் தா வ து அஞ்சி மீண்ட படலம். கும்பினியின் தலைமைச் சேனுதிபதியாயிருந்த மேஜர் மெக்காலே (Major Macaulay) பல இடங்களிலுமுள்ள படை களேத் திரட்டினன். கொடிய சுடு வெடிகளோடு சேனேகள் திரண்டு நின்றன. கேப்டன் மார்ட்டின் (Captain Martin) மேஜர் ஷெப்பேடு (Sheppard), லெவ்டினெண்டு வெசி (Lieut Wesey) முதலாயினுேம் உபதளபதிகளாய் ஊக்கி நின்றனர். சிறையிலிருந்து தப்பிப்போன ஊமைத்துரையைப் பிடிக்க மூண்டு படைகளே எழுப்பி வந்தார். 1801 பிப்ரவரி மாதம் 8-ந்தேதி (8-2-1801) பாஞ்சாலங்குறிச்சியை நோக்கிப் படைகள் மூண்டு வந்தன. இடையே குலையகல்லூர் என் னும் ஊர் அயலே பாஞ்சை வீரர்களால் அல்லல்கள் அடை ந் தன; முடிவில் 9-2-1801 காலே ஒன்பது மணிக்குப் பாஞ் சைக் கோட்டையைக் கண்டன. தரை மட்டமாய்த் தட்டி யிருந்த கோட்டை நெட்டு நெட்டாய் நிமிர்ந்து இரண்டா யிரம் போர் வீரர்களோடு நிலைத்து நிற்பதைக் கண்டதும் சேனைத் தலைவன் திகைத்தான்; போராட நேர்ந்தால் யாவ ரும் அடியோடு அழிய நேர்வர் என்பதை அறிந்தான். தந் திர மாய்ப் படைகளேத் திருப்பி நடத்திச் சாதுரிய சாகசமாய் மீள நேர்ந்தான். அவ்வாறு அஞ்சி மீண்ட நிலைகளே இந்தப் பகுதி தகுதியாய் விளக்கி யுள்ளது. 24.99 சேனை எழுந்தது. ஊமை மன்னனே உருத்துடன் பிடித்திட ஊக்கிச் சீமை மன்னிய வெள்ளேயர் சிந்தையுட் செருக்கிச் சேமம் மன்னிய பாஞ்சையஞ் சீர்ப்பதி சேர நாமம் மன்னிய சேனேயை நடத்தினர் நயந்தே. (1) 25 OO செருக்கி வந்தது. தருக்கி மேல்வங்த படைகளேக் சதுருடன் எழுப்பி நெருக்கி வந்திந்த நெடுநகர் நேர்ந்துமுன் முற்றி வெருக்கொ ளும்படி பொருதிட வேண்டுமென் றுக்கிப் பொருக்கெனப்படைத் தலைவர்கள் எழுந்தனர் பொங்கி.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/519&oldid=913051" இலிருந்து மீள்விக்கப்பட்டது