பக்கம்:வீரபாண்டியம்.pdf/652

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. அக்கினி மூண்டு பொருத படலம் 605 சேனைத் தலைவன் சீறி ஏறியது. 1118 இத்திறம் இன்னவர் நிற்க அக்கினி சித்திரப் பரிமிசைச் சீறி ஏறினன் எத்திறத் தும்படை ஏவி ஆர்த்தனன் தத்திய கடலெனத் தாவி வந்தன. {{5} வெடிகள் விரைந்தன. 1119 குடிவெறி கொண்டவர் கூடி மண்டியே சுடுவெடித் திரளுடன் சூழ்ந்த டர்ந்தனர் அடுபடை வீரர்கள் ஆர்த்தெ ழுந்தனர் படுபகை படுமெனப் பணித்து வந்தனர். (20) பீரங்கிகள் பெய்தன. 1150 வடபுறம் மேல்புறம் வார்த்து நாட்டிய அடலுறு பீரங்கி ஆறும் காரென மிடலுடன் முழங்கின. வெய்ய குண்டுகள் படரெரி சிந்தியே பறந்து பாய்ந்தன. {2}} குண்டுகள் நீண்டன. 1151 குண்டுகள் கோட்டையைக் குலேக்க மூண்டன எண்டிசை களிலிகல் ஏறி நின்றவர் மண்டினர் வகைவகை வரிசை யாகவே அண்டினர் கடுத்தனர் அடுத்துச் சுட்டனர். (22) சமர் மூண்டது. 1152 இன்ருெடு பகையினே இடர்க ளேந்துநாம் வென்றியை அடைந்திட வேண்டு மென்றவர் கன்றிய கடுப்புடன் கடுகி எங்கனும் துன்றினர் தொல்லமர் தொடர்ந்துடற்றிஞர். சிரங்கள் சிந்தின. 1153 வந்தெதிர் படைகளே மன்னன் சே8ணகள் முந்தெதிர்க் தடர்ந்துமுன் முனேங்து மாட்டின; சிந்தின சிரங்களும் செறிந்த தோள்களும் வந்திழி குருதிகள் மண்டி நின்றன. {24}

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரபாண்டியம்.pdf/652&oldid=913257" இலிருந்து மீள்விக்கப்பட்டது