12. ஞானமும் தவமும்
111
அங்கே சிற்பக்கலையில் சிறந்தோர் செதுக்கி அமைத்த பாவைகளைப் போன்ற அழகு மகளிர் உலாவுவார்கள். அவனோ பெரு வீரன். அவன் திண்டோள் களைக் கண்ட மகளிர் அவனை அணைய வேண்டுமென்று அவாவுவார்கள். அந்தப் பேறு கிடைக்காவிட்டால் மெலிந்து வாடுவார்கள். அவர்கள் வளைகள் நெகிழும்; இறை கெகிழும். இவ்வாறு பல மகளிருடைய இழைகளே கழுவும்படி செய்த வீரன் அவன். திருவும் அழகும் வீரமும் வலிமையும் உடைய அவன் இப்போது துறவியாகி விட்டான்.
இப்போது எப்படி இருக்கிறான்?
இப்போது அவன் வாழும் இடம் காடு. மூங்கில்கள் வளர்ந்த மலைச்சாரற் காடு அது, மலையிலிருந்து வரும் அருவியில் அவன் பலகால் நீராடுகிறன். அங்கே எரியோம்புகிறான். அதற்குரிய சமித்தைக் காட்டு யாரை கொண்டுவந்து தள்ளுகிறது. விலங்கினங்கள் அவனுக்கு அஞ்சுவதில்லை; அவனை அச்சுறுத்துவதும் இல்லை. பிற உயிர்களுக்குச் சிறிதளவும் தீங்கு புரியாத விரதத்தை அல்லவா அவன் மேற்கொண்டிருக்கிறான்? அதனால் அவை அவனுக்கு ஏவல் புரிகின்றன.
அவனுடைய கேசம் சடையாகிவிட்டது. நீரில் முழ்கி அந்தச் சடையை உலர்த்துகிறான் "அருவி ஆடிச் செந்தி வேட்டுச் சடையைப் புலர்த்தும் இவனா முன்பு பாவை யன்ன மகளிரின் தொடியை நெகிழ்த்த மள்ளன்! என்று கண்டோர் வியக்கும் வண்ணம் அவன் தாபதக் கோலத்தில் ஒளிர்கிறான்.-இப்படி மாற்பித்தியார் என்ற புலவர் பாடுகிறார்.
"ஒவத்து அன்ன இடனுடை வரைப்பின்
பாவை அன்ன குறுந்தொடி மகளிர்
இழைநிலை நெகிழ்த்த மள்ளம் கண்டிகும்;