6
வீரர் உலகம்
அரசன் ஓர் ஒற்றனை மாத்திரம் விடவில்லை. ஒருவரை ஒருவர் தெரிந்து கொள்ளாதபடி வெவ்வேறாக இரண்டு ஒற்றர்களை அனுப்பியிருந்தான். சில சமயங்களில் மூன்று ஒற்றர்களையும் அனுப்புவதுண்டு. முதலில் போனவன் ஏமாந்து போனாலும், பகையாளியின் ஆசை வார்த்தையால் மயங்கித் துரோகம் செய்யப் புகுந்தாலும், சோம்பலாலோ வேறு காரணங்களாலோ பொய் சொல்லத் துணிந்தாலும், பகைவருடைய கட்டுக்காவலில் அகப்பட்டாலும், பின்னாலே போனவன் உண்மையை உணர்ந்து வந்து சொல்ல முடியும். அதனால் தான் இரண்டு ஒற்றர்களைத் தனித்தனியே அனுப்பினான்.
★
ஒற்றர்கள் எப்படி இருக்க வேண்டும், அரசன் அவர்களை எப்படி நடத்த வேண்டும் என்னும் கருத்துக்களை இந்த நாட்டு அர்த்தசாஸ்திரங்களும், மேல்நாட்டு அரசியல் நூல்களும் விரிவாகச் சொல்கின்றன. திருக்குறளில் ‘ஒற்றாடல்’ என்று ஓர் அதிகாரமே இருக்கிறது.
அரசனுக்கு இரண்டு கண்ணைப்போல ஒற்றும் அரசியல் நூலும் உதவுகின்றன. பகைவரிடத்தும் அயலாரிடத்தும் நண்பர்களிடத்தும் என்ன என்ன நிகழ்கின்றன என்பதை நாள்தோறும் ஒற்றர்களைக் கொண்டு தெரிந்து கொள்வது அரசனுக்குரிய முக்கியமான கடமை. அவ்வாறு ஒற்றரைக் கொண்டு நிகழ்ச்சிகளை அறிந்து ஆராய்ந்து நடவாத அரசனுக்கு வெற்றி கிட்டாது.
அரச காரியம் செய்கின்ற பலவகை அதிகாரிகள், அரசனுடைய சுற்றத்தார், பகைவர்கள் ஆகிய அனைவருடைய பேச்சுக்களையும் செயல்களையும் அவர்கள்