14. வாகையின் வகை
123
பால்மணம் மாறாத தன் புதல்வனை, “நீ போருக்குச் செல்” என்று தூண்புனாள். தனக்கு அவன் ஒருவன்தான் மைந்தன் என்பதை நினையாமல், வேறு ஆடவர் இல்லாத அந்தக் குலத்துக்கு அவன் ஒருவனேனும் இருக்கிறானே என்ற திருப்தி அவளுக்கு. அத்தகைய மடந்தையரை மூதில் மடந்தையர் என்று சொல்லுவார்கள்.
மறக்குடியில் பிறந்த மற்றறொரு பெண், மேலும் மேலும் வீரம் சிறந்து நின்ற தன்னுடைய குடியின் பெருமையை எடுத்துச் சொல்லுகிறாள். அவளுடைய தக்ப்பன் போரில் தன் வீரத்தைக் காட்டிப் பட்டான். அவன் இன்று நடுகல்லாக நின்று பூவும் புகையும் பெறுகிறான். அவளுடைய கணவனோ சில காலத்துக்குமுன் போர்க்களம் சென்று முகத்திலும் மார்பிலும் புண்ணைப் பெற்று வீர சொர்க்கம் அடைந்தான். அவளுக்குச் சில தமையன்மார்கள் இருந்தார்கள். அவர்களும் படையின் முன்னணியில் நின்று உயிரைப் பலி கொடுத்தனர். எல்லாருக்கும் மேலாக, அவருைடைய புதல்வன் படையில் சேர்ந்து போரிடச் சென்றான். அவன் சென்ற படை பின்னிட்டது. அதனால் அஞ்சாமல் அந்தப் படையின்யின்னே நின்று பகைவரை எதிர்த்தான், அப்பொழுது பகைவருடைய அம்புகள் அவன் உடல்பெம்லாம் தைத்தன. கீழே விழுந்து கிடந்த அவனைப் பார்த்தால் முள்ளம் பன்றியைப் போல இருந்தது. இவ்வாறு தன்னுடைய உறவினர்கள் போர்க்களத்தில் காட்டிய வீரச் சிறப்பை அக்த மறக்குடி மங்கை சொல்லுகிறாள்.
“கல்நின்றான் எந்தை; கணவன் களப்பட்டான்;
முன்நின்று மொய் அவிந்தார் என்னையர்-பின்நின்று
கைபோய்க் கணைஉதைப்பக் காவலன் மேல்ஓடி
எய்போல் கிடந்தான்என் ஏறு.”