இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
14. வாகையின் வகை
125
தாகக் கொண்டு வருந்துவதும், பொய் கூறுதல் கள்ளுண்ணுதல் முதலியவற்றைத் துறந்து நிற்றலும் அருளொடு புணர்ந்த துறவறத்தின் இலக்கணம். எந்தப் பொருளினிடத்தும் பற்றின்றி நிற்கும் தன்மையும் அந்தத் துறவின் இலக்கணமாகும். இவை யெல்லாம் அகப்பகையை வென்ற வெற்றி.
இப்படியாக வீரத்தை விரிவாகச் சொல்லும் புறப்பொருளில், பல வகை வெற்றியைச் சொல்லும் வாகைத் திணையில், மக்களுடைய நிலையும் சிறப்பும் அகப்புறப் போராட்டங்களில் வென்று நிற்கும் வீரமும் பேசப்படுகின்றன.