2. நிரை மீட்கும் போர்
19
மாடுகளைக் கடத்திவிட்டு, வயலில் விளைந்த கழுநீர்மாலையோடு கரந்தைமாலையையும் அணிந்த விராடன்மேல் கரிய மேகம் போல வில்லை வளைத்து அறுபது அம்புகளாகிய மழையைப் பொழிந்தான்.]
அவனெதிர் நின்று பொருத விராடன் அவனது தேரை வீழ்த்தினான். உடனே திரிகர்த்தராயன் வேறு தேரில் ஏறிப் பொருது விராடனைக் கைப்பற்றித் தன் தேரில் கட்டிவிட்டான். அங்கே புரோகித உருவத்தில் இருந்த தருமபுத்திரன் அது கண்டு, அருகில் சமையற்காரன் உருவில் நின்ற வீமனுக்குக் குறிப்பால் உணர்த்த, அவன் போர் செய்யத் தொடங்கினான். அவனுக்கு முன் நிற்கும் ஆற்றல் யாருக்கு உண்டு? அவன் திரிகர்த்தராயனே மடக்கி விராடனே விடுவித்ததோடு பகைவனைத் தன் தேரில் கட்டிக் கொணர்ந்தான். பொழுது சாய்ந்தது. தருமபுத்திரன் ஏவலின்படி வீமன் திரிகர்த்தனை அவிழ்த்து விட்டான். அவன் துரியோதனனிடம் சென்று தனக்கு நேர்ந்ததைச் சொன்னான்.
மறுநாள் துரியோதனனே துரோணர் முதலியவர்களோடு படையெடுத்து வந்தான். விராடன் மகன் உத்தரன் போர்முனை சென்றான். அவனுக்குப் பேடியாகிய அருச்சுனன் தேர்விட்டான். போர்முனைக்கு வந்தவுடன் அங்குள்ள படைகளைக் கண்டு உத்தரன் அஞ்சி நடுங்கி ஓட, அருச்சுனன் அவனை எடுத்துத் தேரில் கட்டினான். தானே போர் செய்ய எண்ணினான். தான் ஓரிடத்தில் மறைத்து வைத்திருந்த தன் ஆயுதங்களை எடுத்து வந்தான். உத்தரனுக்கு அறிவுரை கூறி அவனைத் தேர் விடச் செய்து தானே போரிட்டுத் துரியோதனன் படைகளைத் தோல்வியுறச் செய்து ஓட்டினான். அப்போது பாண்டவர்கள் மறைவாக வாழ வேண்டிய கால எல்லை முடிவு அடைந்தது. அதனால் அருச்சுனன் வெளிப்பட்டுப்