3. நாடு கொள்ளும் போர்
27
களைப்போல வேல்கள் பிறழ்ந்து ஒளிவிட்டாலும், பொன்னாலாகிய நெற்றிப் பட்டத்தையுடைய பெரிய யானைகளின் தந்தங்களின் நுனி குத்தினாலும் ஓடாமல் நின்று பொருது வெற்றி பெற்ற பெருமையையுடையவர்கள் வீரர்கள். அவர்கள் ஆழமான நீரையுடைய பொய்கையில் பிறழ்ந்த வாளை மீன், பெரிய வீடுகளில் நெல்லை வைத்திருக்கும் சேர்களுக்கு அடியில் புரளுவதற்குக் காரணமான வயல்களைப் பெறுவார்கள்; அது பெரிய காரியமா?’ என்று ஒரு புறநானூற்றுப் பாடல் சொல்கிறது.
“கால மாரியின் அம்பு தைப்பினும்
வயற்கெண்டையின் வேல்பிறழினும்
பொலம் புனை ஓடை அண்ணல் யானை
இலங்குவான் மருப்பின் நுதிமடுத்து ஊன்றினும்
ஓடல் செல்லாப் பீடுடை யாளர்
நெடுநீர்ப் பொய்கைப் பிறழிய வாளை
நெல்லுடை நெடுநகர்க் கூட்டுமுதற் புரளும்
தண்ணடை பெறுதல் யாவது!”
(புறநானூறு, 287)
பகைவர்கள் நின்று பொர மாட்டாமல் ஓட, அவர்களுடைய நாட்டைக் கொளுத்துவதும் உண்டு. பெண்கள் அஞ்சி அழுது ஊருக்குப் பொதுவான இடத்திலே திரண்டு அலமர, அவ்வூர்களில் எரியூட்டுவார்கள். பாழ்பட்ட பகைவர் நாட்டுக்குள்ளே புகுந்து, அங்கே கிடக்கும் மணிகளையும் பொன்னையும் கைப்பற்றிக்கொண்டு வருகிறார்கள் வீரர்கள். வைரமும், மாணிக்கமும், முத்தும், பொன்னும் அவர்கள் கொண்டு வந்திருக்கிறார்கள். அவற்றைத் தம் நாட்டில் பலருக்கும் வழங்குகிறார்கள், முதலில் வீரர்கள் எழுச்சி பெறும்படியாகப் பாடிய புலவர்களுக்குப் பரிசு வழங்குகிறார்கள். யாழை மீட்டிப் பாடும் பாணர்களுக்குத்