6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்
51
"என்பொடு தடிபடு வழி எல்லாம்
எமக்கு ஈயும் மன்னே!
அம்பொடு வேல்துழை வழி எல்லாம்
தான்நிற்கும் மன்னே!"
'நரந்தம் பூமாலையைத் தொட்டதனால் அந்த மலரின் மணம் வீசும் அவன் கரங்கள். எங்கள் தலை ஒரே நாற்றம் அடிக்கும். ஆனாலும் என்னிடம் உள்ள ஆதரவால் தன் மணமுடைய கையால் என் நாற்றமுடைய தலையைத் தடவி அன்பு பாராட்டுவான்.'
"நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!"
இவ்வாறு புலவர்களுக்கு அன்பையும் உணவையும் பொருளையும் பொழிந்த அதிகமான் இறந்துபட்டான். அவன்மேல் வேலை ஏவிப் பகைவர் அவனைக் கொன்றனர். அந்த வேல் அவன் மார்பில் மட்டுமா இயங்கியது? அது எத்தனையோ பொருள்களைத் துளைத்துவிட்டது. இதை மேலே சொல்கிறார் ஔவையார்.
'சிறந்த இசைக்கலையில் தலைவர்களாகிய பாணர்கள் தம் கையில் வைத்திருக்கும் பிச்சைப் பாத்திரமாகிய மண்டையை அவன் மார்பில் துளைசெய்த வேல் துளைத்தது. அதுமட்டுமா? அதிகமானிடம் சென்று இரந்த இரவலர்களின் கைகளைத் துளைத்துவிட்ட்து. அவர்கள் இனிக் கை நீட்ட இடம் இல்லை. சுற்றத்தார்கள் கண்கள் ஒளி மழுங்கி நிற்கும்படியாக, அழகிய சொல்லையும் நுட்பமாகிய ஆராய்ச்சியையும் உடைய புலவர்கள் நாவிலே போய் அந்த வேல் விழுந்தது. இனி அந்தப் புலவர்கள் எப்படிப் பாடுவார்கள்?'
"அருந்தல் இரும்பாணர் அகல்மண்டைத் துகளயுரீஇ
இரப்போர் கையுளும் போவிப்