பதிப்பகத்தார் உரை
தமிழ் நாட்டின் புகழ் பெற்ற எழுத்தாளர்களுள் திரு கி. வா. ஜகன்னாதன் அவர்களும் ஒருவர் என்பதனை நாடு நன்கறியும். நல்ல நூல்கள் நூற்றுக்குமேல் எழுதிய நல்லாசிரியர். அறிஞர் நூல்களுக்கு முதன்மை கொடுத்து வெளியிட வேண்டும் எனும் நோக்கத்திற்கு ஏற்ப முன்பு கவி பாடலாம் எனும் நூலை வெளியிட்டோம். இப்பொழுது தமிழர் தம் வீர வாழ்வினை விளக்கிக் காட்டும் வீரம் உலகம் வெளியிடுகிறோம். தொடர்ந்து தேவாரம் பாடிய மூவர் பற்றி மூன்று நூல்கள் வெளியிட இருக்கின்றோம் என்பதனையும் மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்ளுகிறோம்.
வீரத்தின் விளை நிலமாம் தமிழகத்தின் பொற்கால வாழ்வினை ஆசிரியர் தமக்கே உரிய அழகான நடையில் விளக்குகிறார். தொல்காப்பியம் தொடங்கி இலக்கிய இலக்கணங்களில் புதைக்து சிக்கும் தமிழ்: பேராற்றலை – பேராண்மையை வெளிக் கொணர்ந்துள்ளார். கற்றதுணர விரித்துரைக்கும் ஆசிரியர் தமிழமுதாம் காவியத்தை வாரி வழங்குகிறார். ஆழ்ந்து கற்றும் பழந்தமிழ்ப் புலர் பண்பும், பொருளில் அழகு காணும் புதிய திறனாய்வுப் பண்பும் நூல் முழுதும் மிளிரக் காண்கிறோம், மரபுவழிப் புலமையின் ஆழமும், புதிய அறிவின் ஒளியும் நாலுக்குச் சிறப்பு நல்குகின்றன. பேச்சு, எழுத்து ஆகிய இத்துறையிலும் வல்ல ஆசிரியர் தற்போர் உள்ளம் கொள்ளுமாறு கருத்தினைத் தொகுத்துரைப்பது குறிப்பிடத்தக்கது.
எங்கள்பால் அன்புமிக்க ஆசிரியர் அவர்கட்கும், நூல் வெளியீட்டுத் துறையில் கற்கருத்துக்களே கல்கிப் பொலிவோடு புதிய தமிழ் நூல்கள் வெளிவரத் துணை செய்யும் திரு ச. மெய்யப்பன் எம். ஏ., அவர்கட்கும் எம் நன்றி என்றும் உரியது.
| சிதம்பரம் 11—11—66 |
ச. முத்துப்பழநியப்பன் | |||||