உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/60

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்

53

கியது. இந்தப்பாட்டை மன்னைக் காஞ்சிக்கு உதாரணமாக நச்சினார்க்க்கினியர் தொல்காப்பிய உரையில் காட்டியிருக்கிறார்.

பாட்டு முழுவதையும் தொடர்ச்சியாகப் பார்த்தால் இந்தக் கழிவிரக்கம் நன்றாகத் தெரியவரும்.

“சிறியகள் பெறினே, எமக்கு ஈயும்; மன்னே!
பெரியகள் பெறினே,
யாம் பாட, தான் மகிழ்ந்து உண்ணும் மன்னே!
சிறுசோற் றானும் நனி பல கலத்தன் மன்னே!
பெருஞ்சோற் றானும் நனிபல கலத்தன் மன்னே!
என்பொடு தடிபடு வழிஎல்லாம் எமக்கு ஈயும் மன்னே!
அம்பொடு வேல்நுழை வழிஎல்லாம்
தான்நிற்கும் மன்னே!
நரந்தம் நாறும் தன்கையால்
புலவு நாறும் என்தலை தைவரும் மன்னே!
அருந்தலை இரும்பாணர் அகல்மண்டைத் துளையுரீ இ
இரப்போர் கையுளும் போகிப்
புரப்போர் புன்கண் பாவை சோர,
அஞ்சொல்நுண் தேர்ச்சிப் புலவர் நாவில்
சென்று வீழ்ந்தன்று, அவன்
அருநிறத்து இயங்கிய வேலே!
ஆசா கெந்தை யாண்டுளன் கொல்லோ?
இனிப்,
பாடுநரும் இல்லை; பாடுநர்க்கு ஒன்று ஈகுநரும் இல்லை;
பனித்துறைப் பகன்றை நறைக்கொள் மாமலர்
சூடாது வைகியாங்கு, பிறர்க்கு ஒன்று
ஈயாது வீயும் உயிர்தவப் பலவே!”

[கலத்தன்-கலத்தை வைப்பவன். தடி-தசை, நரந்தம்-நரந்தம் பூ. புலவு-புலால் மாற்றம், தைவரும்-தடவுவான். இரும்பாணர்-கருநிறம் பெற்ற பாணர். மண்டை-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/60&oldid=1850237" இலிருந்து மீள்விக்கப்பட்டது