6. போரிடைப் பல நிகழ்ச்சிகள்
57
பட்டுத் துன்பத்தை உண்டாக்கின. மேலே இருப்பவர்களுக்கு மலையில் விளைந்த உணவுப் பண்டங்களே போதுமானவையாக இருந்தன. போர் நெடுநாள் நீடித்தது. கடைசியில் மூவேந்தரும் சோர்ந்துபோய்த் தம் படைகளுடன் மீண்டனர். கடைசியில் வஞ்சகத்தால் பாரியைக் கொன்றனர்.
தன் பெண்களை அவர்களுக்குக் கொடுக்கக் கூடாது என்ற உறுதியைக் கடைப்பிடித்தான் பாரி. அதைக் காரணமாக வைத்து மூவேந்தரும் போர் செய்தார்கள். மகளின் பொருட்டுப் போர் நிகழ்வதுண்டு என்பதற்கு இந்த நிகழ்ச்சி சிறந்த சான்றாகும்.
★
இப்படிப் பலவாறாகப் போர் நிகழும்போது, படையெடுத்து வந்த அரசனுடைய போர்ப்படைகளை எல்லாம் தோல்வியுறச் செய்கிறான், நாட்டை ஆளும் அரசன்; அவன்தான் காஞ்சிமாலை யணிந்து போர் செய்கிறவன். களையை முற்றும் களைந்து எறிவதுபோலப் பகைப்படைகளில் ஒரு சிறு பகுதிகூட எஞ்சாமல் அடியோடு அழித்துப் போர்க்களத்தை முன் இருந்ததுபோல ஆக்கிவிடுகிறான். பகைமன்னர் தமக்குத் துணையாக வேறு பலரையும் சேர்த்துக்கொண்டு வந்து போர் செய்கிறார்கள். அப்படித் துணை பெற்றும் அவர்களால் வெற்றிபெற முடியவில்லை. யாவரும் தோல்வியுறுகிறார்கள்.
“மன்னர்யாரையும் மறம்காற்றி
முன் இருந்த முனைகடித்தன்று”
என்று இந்தச் செயலைச் சிறப்பிக்கிறது: புறப்பொருள் வெண்பா மாலை. ‘வேந்தர் எல்லாரையும் சினம் பொங்கிக்கக்கச் செய்து, அவரை முன்பு இருந்த போர்க்களத்-