உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/83

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

76

வீரர் உலகம்

விழுந்து பணிகிறார்கள். ஒரு மதிலை முற்றுகையிட்டு வென்ற வீரத்தின் உரம் எங்கும் பரவிப் போர் இல்லாமலே பல பகைவரை அடிபணியச் செய்துவிடுகிறது. இவ்வாறு முற்றுகையில் வெற்றி பெற்ற வீறுடைய வேந்தன், பகைவர் தன் தாள் பணிய, தான் கைப்பற்றிய கோட்டையினிடையே வெற்றி நீராடி, மன நிறைவோடு வீற்றிருக்கிறான்.

இத்தனையும் உழிஞைத் திணையென்னும் பகுதியில் வரும் செய்திகளாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/83&oldid=1851492" இலிருந்து மீள்விக்கப்பட்டது