உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/88

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

9. மதில் காவல் போர்

81

படைகளையெல்லாம் மலையின்மேல் ஏற்றுவதென்பது நடவாத காரியம். ஆதலின் கீழ் இருந்தபடியே மதிலை நோக்கி அம்பை எய்துகொண்டிருந்தார்கள். அப்படிச் செய்வதனால் யாதொரு பயனும் இல்லை என்று அவர்களுக்குத் தோன்றியது. ‘மலையைச் சுற்றிலும் படைகளை நிறுத்தி வைத்தால் கீழேயிருந்து யாரும் போகமுடியாது. மேலே உள்ளவர்களுக்குக் கீழிருந்துதானே உணவுப் பண்டங்கள் போகவேண்டும்? சில நாட்கள் ஒன்றுமே செய்யாமல் கீழே வளைத்திருந்தால் கடைசியில் பாரி சமாதானத்துக்கு வந்துவிடுவான்’ என்று அவர்கள் எண்ணினார்கள். குன்றின்மேல் உள்ள வளத்தை அவர்கள் அறியவில்லை.

மேலே பாரியினுடன் அவனுடைய அவைக்களப் புலவராகிய கபிலர் இருந்தார். பல நாட்கள் முற்றுகையிட்டுச் சும்மா இருந்தாலே மேலே இருப்பவர்களைப் பட்டினி போட்டுக் கொன்றுவிடலாம் என்ற பைத்தியக்கார எண்ணம் மூவேந்தர்களுக்கு இருப்பதை அவர் உணர்ந்துகொண்டார். தங்களிடம் உள்ள வளத்தைப் பகைவர் உணரட்டும் என்று எண்ணி ஒரு பாட்டை ஓலையில் எழுதிக் கீழே உள்ளவர்கள் தெரிந்துகொள்ளும்படி ஓர் அம்பிலே கோத்து அதை அனுப்பச் செய்தார்.

அவர் அந்தப் பாட்டில் சொல்லியிருந்தது இதுதான்: ‘இந்தப் பாரியினது பறம்பு நீங்கள் நினைக்கிறபடி அவ்வளவு எளிய மலை அன்று. முரசை அடித்து ஆரவாரம் செய்துகொண்டு மூன்று முடி மன்னர்களும் வந்திருக்கிறீர்கள். நீங்கள் மூன்று பேரும் எவ்வளவு நாளைக்கு முற்றுகையிட்டாலும் எங்களுக்குக் கவலை இல்லை. எங்களுக்கு உணவுப் பஞ்சம் இல்லை. உழவர்கள் உழாமலே, உண்ணும் பொருள்கள் நான்கு எங்களுக்குக் கிடைக்கின்றன. உழவர்கள் உழுது பயிர் செய்துதான் நெல்

வீ. உல-6

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/88&oldid=1848315" இலிருந்து மீள்விக்கப்பட்டது