உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வீரர் உலகம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

88

வீரர் உலகம்

கொள்கைகளிலும் வேறுபாடு இருந்தாலும் போர் கிகழும் துறைகளில் பெரிய வேறுபாடு இல்லை.

தும்பை இரு சாராரும் பொரும் நிலையைச் சொல்வதாதலின் இதற்கு இனமான வேறு திணை இல்லை. வெட்சிக்குக் கரந்தையும், வஞ்சிக்குக் காஞ்சியும், உழிஞைக்கு நொச்சியும் எதிரெதிரே அமைந்ததுபோலத் தும்பைக்கு எதிராகத் திணை ஏதும் இல்லை. அது இரண்டு கட்சிக்கும் பொதுவானது.

போர்க்களத்தில் தன் விரத்தை நிலைநாட்டும் பொருட்டு இதோ வேந்தன் தும்பைப் பூவைப் புனைந்து கொள்கிறான். தன்னுடைய படைத்தலைவர்களுக்கும் வீரர்களுக்கும் பல பொருள்களை வீசி ஊக்கமூட்டுகிறான். சிலர் அடையாளப் பொறியைப் பெறுகிறார்கள். சிலர் பணம் பெறுகிறார்கள். சிலர் யானைகளை அடைகிறார்கள். சிலருக்குக் குதிரைகள் கிடைக்கின்றன. சிலர் சிறு நாடுகளும் சிலர் வயல்களும் பெறுகிறார்கள். போரில் வென்று பகைவரிடமிருந்து பல பொருள்களைக் கவர்ந்த பின்பு அவற்றைப் பகிர்ந்து கொடுக்கப் போகிறான் அரசன் என்பது கிடக்கட்டும்.போர் என்று கூவி முரசு கொட்டினார்கள். நாங்கள் வருகிறோம் என்று வீரர் தோள் கொட்டினார்கள். அப்பொழுதே அவர்கள் கைமேற் பலனாக மேலே சொன்னவை கிடைத்தன. அவர்களுக்கு ஊக்கம் நிமிர்ந்து வரும் என்று சொல்லவும் வேண்டுமா? உறுதியுடன் போராட முனைகின்றனர் யாவரும். “இதை முற்ற நிறைவேற்ற முடியுமா?” என்று யாரேனும் ஐயம் கொண்டால் அவர்கள் சீறுகிறார்கள். “யோசித்துச் செய்யுங்கள்” என்று யாரேனும் அறிவுரை கூற முன்வந்தால், “எதை யோசிப்பது? எங்கள் அரசன் முன் வைத்த காலைப் பின் வைக்க

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீரர்_உலகம்.pdf/95&oldid=1848626" இலிருந்து மீள்விக்கப்பட்டது