பக்கம்:வீர காவியம்.pdf/242

விக்கிமூலம் இல் இருந்து
Jump to navigation Jump to search
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
) போர்ப் படலம்


இயல் 1 13 மகனும் கனவனும் மடி ந்ததால் வேல்விழி நகையிழந் தழுதே நலிந்துயிர் துறந்தனள், பெற்றெடுத்த மகன்மடிந்தான் மாலை யீந்த பெருங்கிழவன் தான்மடிந்தான் என்ற செய்தி விற்ருெடுத்த புருவத்தாள் வயந்தம் வாழும் வேல்விழியாள் செவிப்படலும் ஆற்ரு ளாகி முற்றெரிக்கும் அனல்மூட்டி அதனுட் பாய்ந்து மூழ்குதற்கு முயன்ருளைத் தடுத்தா ராக, உற்றிருக்கும் வாழ்வெதற்கோ? நாளும் மாயும் உயிரெதற்கோ? எனமொழிந்து மனமு டைந்தாள்.473 உருமாறித் துயில் மாறி நினைவும் மாறி உணவுகொளும் மனம்மாறித் துயரம் ஏறிக் கருவூறிக் கிடந்தானை அனுப்பி வைத்த கதை மாறிப் போனதையே நினைந்து நைந்தாள்: பரியேறிப் போனவன் கைப் படைகள் கண்டு, பாலனவன் அணிந்திருந்த உடைகள் கண்டு, வெறிஏறி அழுதிடுவாள் உருகி நின்று விழுந்திடுவாள் எழுந்திடுவாள் தொழுவாள் அன்னை. ή /