பக்கம்:வீர காவியம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வீரகாவியம் 26

இயல் 10

வயத்தரசன் விருந்தயரப் பணிந்து வேண்ட
மாவேழன் சினந்தணிந்து மனமிசைந்தான்.

பொறுமையுடன் இவைமொழிவான், ‘வீரமொன்றே
      பூணாகக் கொண்டொளிர்வோய்! தவிர்க சீற்றம்;
தெறுபுரவி யாண்டுளதே எனினும் நாட்டில்
      தேடியதைக் கொணர்விப்பேன்; வருந்தல் வேண்டா;
உறுவலிசேர் நின்பரிமா பிரிந்த செய்தி
      உரைத்ததன்பின் தானறிவேன்; பாய்மா தேடத்
திறமுடையார் நாற்புறமும் செலப்ப ணிப்பேன்;
      சென்றவர்தாம் கைக்கொண்டே மீள்வர் மேலோய்!31

கொற்றமுறப் பொருவலியோய்! தேடிச் சென்றோர்
      கொய்யுளைய புரவியொடு மீளுங் காறும்
பற்றுடனென் அரண்மனைக்கே எழுந்து போந்து
      பாங்குபெற விருந்தினனாய்ச் சின்னாள் வைகிச்
சுற்றமெனக் கருதிஎனைப் பெருமை செய்க!
      தோழமையை வளர்த்திடுக! வருக’ என்று
கொற்றவனவ் வீரனிடம் கனிந்து நோக்கிக்
      குளிர்மொழிகள் பலகூறிப் பணிந்து நின்றான்.32


தெறு - பகைவரை அழிக்கின்ற, கொற்றம் - வெற்றி.

கொய்உனை - கொய்யப்பட்டபிடரிமயிர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வீர_காவியம்.pdf/29&oldid=911485" இலிருந்து மீள்விக்கப்பட்டது