பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/164

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

காட்சி : 23 காலம் : பகல். இடம் : சாலை. நிகழ்ச்சி : விடுதலைப் போராட்டத்தில் திருப்பூர் குமரன் தாக்கப்படுதல். ('வந்தேமாதரம் பாட்டுப் பாடிக்கொண்டே தேச பக்த வீரர்கள் ஊர்வலம் செல்கின்றனர். அவர் 'களைப் பின் தொடர்ந்து போலீஸ் செல்லு கிறது.) போலீஸ் : பாடாதே 144. கொடியைக் கீழே போடு! தடையுத்தரவு. [பாட்டு மேலும் முன்னேறுகிறது. இன்ஸ்பெக்டர் மேடையில் வெளிச்சத்தில் தோன்றுகிருன்.) இன்ஸ்பெக்டர் : அடே கில். ஊர்வலத்தைக் கலை. ஒடு, பாடாதே; கொடியைக் கீழே போடு. ஊம், ஒடு. சுந்தரம் : ஓடுவதற்காக வரவில்லை. மகாத்மா ஆணைப் படி சத்தியப் போர் புரிய வந்திருக்கிருேம். இது பேச்சுரிமையுள்ள நாடு. இன்ஸ் : இல்லை. ஆங்கிலேய ஆட்சியின் அடிமை நாடு. சுந்தரம் : இல்லை. நமது சொந்த நாடு சுதந்திர நாடு. இன்ஸ் : சுதந்திர நாடு எங்கிருந்து வந்தது சுதந்திரம்: