பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/182

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

180 விர சுதந்திரம் சத்தி அது அவங்களுக்குப் போகாதபடி ஒட்டு வியாபா ரத்தை நாமே ஆரம்பிச்சுட்டா என்ன? சோணு : அடபோய்யா. ஒட்டு வியாபாரமா? அவனவன் மாடி வீடு கட்டிக்கிட்டு இருக்கிருன். எவனய்யா ஒட்டு வீடு கட்டருன்? ஒட்டு வியாபாரம் செய்ய. கத்தி ஒட்டுன்னு வீடு கட்டற ஒடுன்னு கெனேச்சிங் களா. ஒட்டு உரிமை.ஜனநாயக காட்டிலே மககளுக் குக் கொடுத்த வாக்குச் சீட்டு. சோணு ' எல்லாம் தெரியுது. சொல்லுய்யா! சத்தி : அதாவது மக்கள் ஒட்டுகளை காம மொத்தமா வாங்கி ஏத்துமதி இறக்குமதி பிசினஸ் பண்ணிட்டா என்ன? எப்படி என் யோசனை? சோணு : கோரோசனை! அடபோய்யா. இது என்ன வெளி காட்டு வியாபாரமா, ஏத்துமதி இறக்குமதி பணண? உள்நாட்டு வியாபாரம்தானேய்யா? ஒட்டை விக்கிற தும் நம்ம ஜனங்க, அதை விலைக்கு வாங்கறதும் நம்ம ஜனங்க. சத்தியா: அததுக்கு அங்கங்கே அப்படி அப்படி கொஞ்சம் பணத்தைச் செலவழிக்கனும்; அவ்வளவுதான. தேர் தல் சமயத்திலே கொஞ்சம் கோட்டைத் தாராளமா விட்டா ஒட்டெல்லாம காமளே வாங்கிடலாம். கோட்டை கொஞ்சம் அதிகமா அடிக்கனும். சோணு : ஆமாம் ஏழை ஜனங்கதானே, கோட்டைக் காட்டின ஓட்டைப் போட்டுடுவாங்க.