பக்கம்:வீர சுதந்திரம் (நாடகம்).pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விர சுதந்திரம் 95 ராய் : ஒரு முறை என்னய்யா, பாரத நாட்டை பல முறை பார்த்திருக்கிறேன். லாலா : என்ன? பார்த்திருக்கிருயா? ராய் : பார்த்தது மட்டுமல்லய்யா, அந் த அடிமை மண்ணிலேயே பிறந்த கோடானு கோடி அபாக்கிய சாலிகளில் அடியேனும் ஒருவன். லாலா: என்ன! என் புண்ணிய பா ர த மண்ணில் பிறந்த புதல்வனு நீ? ராய்: ஆம்; பாரதப் புதல்வன்தான் நான். அந்த அடிமை மண்ணில் வாழ்வதைவிட, வெளியே வந்து இந்திய மண்ணில் சுதந்திர விதையைத் துவ வேண்டுமென்ற விரதத்துடன் வெளியேறினேன். தங்களைப் பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் காடு கடத்தியது. என்னை கானே நாடு கடத்திக் கொண் டேன். - லாலா : நீ எந்த ஊர் தம்பி! ராய் : ஒரு காலத்தில் வீரத்தின் விளைநிலம் என்று நீங்களும் மற்றவர்களும் போற்றுவீர்களே -அந்த தங்கமய வங்கத்தில்தான் பிறந்தேன். லாலா : பெயர்? ராய் : நான்தான் எம். என். ராய். லாலா : ஆ. யோ! நீதானு அந்த வீரவாலிபன்? வாழ்க வீரனே! வாழ்க! (அணைத்து) சுகமாக இருக்கிருயா