பக்கம்:வெட்ட வெளிச்சம்.pdf/168

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

166 1825-ம் வருடத்திற்குப் பின்பு ஒர் தமிழ்ச் சங்கம் சென் னையில் ஏற்படுத்தி அதனை விருத்தி செய்தற்குப் பலரிட முள்ள ஓலைப் பிரதிகளைக் கொண்டு வரச் செய்து அச் சிட்டுத் தமிழ் நூற்களைப் பரவச் செய்து வந்தார். அதையறிந்த ஜர்ஜ் ஆரிங்டன் துரை. பட்லர் கந்தப் பன் என்பவரால் தம்மிடருந்த ஒலைப் பிரதி திருக்குறள் மூலமும் திருவள்ளுவர் மாலையும் நாலடி நானூறும் கொண்டுபோய் மேம்பட்ட துரையிடம் கொடுக்க, அவரும் சந்தோஷித்து அக்கால் தன்னிடமுள்ள தமிழ் வித்வான்களாகும் தாண்டவராய முதலியாராலும், மானேஜர் முத்துசாமிப் பிள்ளை அவர்களாலும் 1831-ல் அக்குறள் அச்சிட்டு வெளியிட்டிருக்கின்றார். . ஆனால் திருவள்ளுவர் மாலையில் மட்டும் நூதன மாக நான்கு பாடல்களைச் சேர்த்திருப்பதாய்க் கந்தப் பன் அவர்கள் மேம்பட்ட துரையிடம் முறையிட்டிருப் பதாய்ச் சூரியோதயப் பத்திரிகையில் வரைந்திருக் கின்றார்கள். இவ்வகையில் 1831-ல் வெளிவந்த குறளில் திருவள் ருவ நாயனார் பார்ப்பானுக்குப் பிறந்தார் ஏய்ப்பானுக் குப் பிறந்தார் என்னும் கட்டுக் கதைகள் யாதொன்றும் கிடையாது. அக்குறளை வாசிக்கும் பெரியோர்களும் துரை மக்களும் மிக்கானந்தம் கொண்டது மன்றி அதே தமிழ்ச் சங்கத்ததிபராகும் மிஸ்டர் எலிஸ் துரையவர்கள் நாயனார் குறட்பாக்களுக்கும் சில சார்பு நூற்பாக் களுக்கும் சேர்த்துத் தன் பெயரால் இன்னொரு குறள் புத்தகமும் வெளியிட்டிருக்கின்றார். அப்புத்தகத்திலும் நாயனார் பார்ப்பானுக்குப் பிறந்தார் பை றச்சிக்குப் பிறந்தார் என்னும் கட்டுக் கதைகள் யாதொன்றும் கிடையாது,